வைகுண்டரை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்ட சங்கிக் கூட்டங்கள்

2 Min Read

அரசியல்

நாகர்கோவில், செப்.17 வைகுண் டரை இழிவுபடுத்தி சமூக ஊடகங் களில் பதிவிடும் சங்கிகள்மீது நடவடிக்கை கோரி குமரி மாவட்ட பொதுவுடைமை அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஸநாதனத்துக்கு எதிராக செயல்பட்ட அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் மன்னருடைய கோபத்துக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டார்.  வைகுண்டர், மக்கள் மத்தியில் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டும் என்பதற்காக சமபந்தி விருந்து, முத்திரி கிணறு போன்ற ஏற்பாடு களை செய்து அனைத்து ஜாதி யினரும் சமம் என்ற கோட் பாட்டை உருவாக்கினார். அவர் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத் தையும், ஹிந்து மதத்தில் நடை முறையில் இருந்த மூடத்தனங் களையும் கடுமையாகச் சாடினார். 

அன்றைய காலத்தில் நமது நாட்டில் கல்வி, இயல், இசை, நாட கம், விளையாட்டு என அனைத் தையும் பார்ப்பனியர்களே பயன் படுத்தி வந்தனர். சூத்திரர்கள் எனப்படும் அடிமைகள் வேதங் களை படிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர்கள் அதைக் காதில் கேட்டு விட்டாலே போதும், அவர்களின் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும் என்றும், வேதங்களை சொன்னால் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஸநாதனம் பல கட்டுப் பாடுகளை விதித்திருந்தது. நாட் டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இவ்விதக் கொடுமையை எதிர்த்து   வைகுண்டர், நாராயணகுரு, அய்யன்காளி, ஜோதிராவ்பூலே  போன்றவர்கள் போராடியதால், இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களில் பலர் கல்வி யிலும், கலையிலும், விளையாட்டி லும், உயர் பதவிகளிலும் ஓரளவு பங்கேனும் பெற்றுள்ளனர்.

இதைக்கூட பொறுத்துக் கொள்ளாத பார்ப்பனியம் கடும் கோபத்தில் காட்டு தர்பாரில் ஈடு படுகிறது. தலையை சீவி விடுவேன், நாக்கை அறுத்து விடுவேன் என கொந்தளிக்கிறது. தன்மானம் இல்லாத, சுயமரியாதை இல்லாத கடந்த கால வரலாறு தெரியாத சில ஹிந்துத்துவ அமைப்பினர் ஜாதிமுறையை தட்டிக்கேட்ட அய்யா வைகுண்டரை பற்றி மிக இழிவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவ்வித அறிவிலிகளை, கைக்கூலிகளை கன்னியா குமரி மாவட்ட பொதுவுடைமை அமைப்புகள் குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *