தொடக்க காலத்தில் சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து அரும் பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களின் மகள் பூங்கொடி (வயது 73) அவர்கள் மறைவுற்றார் (7.4.2024) என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவரின் பெருங் குடும்பத்தில், அருட்செல்வன், அருண்மொழி, அழகரசன், வீரசோழன், கலைச்செல்வி, இராவணன் என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதிலிருந்தே, அந்தக் குடும்பம் எத்தகைய கொள்கைக் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்
சகோதரி பூங்கொடி மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்விணையர் டாக்டர் ராஜிகண்ணு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
முகாம்: சேலம்
8.4.2024