அணிந்து வந்து கைதான நபர் குறித்த தகவல்
அகமதாபாத், நவ. 21- இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி குஜ ராத் தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19.11.2023 அன்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி எந்த அளவுக்கு பேசுபொருளா னதோ, அதற்கு இணை யாக ஒட்டுமொத்த உல கின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார் ஒரு பாலஸ்தீன் ஆதரவாளர். முதல் இன் னிங்சில் இந்தியா பேட் டிங் செய்து கொண்டு இருந்தது. களத்தில் 14ஆவது ஓவரின்போது விராட் கோலியும் கே.எல்.ராகுலும் பேட்டிங் செய்துகொண்டு இருந் தனர்.
அப்போது ஒரு இளைஞர் திடீரென மைதானத்திற்கு உள்ளே நுழைந்தார். பிட்ச் அருகே ஓடிப்போய் விராட் கோலியின் தோள் மீது கைபோட்டு கட்டிய ணைக்க முயன்றார். அவ ரது டீ சர்ட்டின் முன் பகுதியில் “பாலஸ்தீன் மீது குண்டு போடாதீர் கள்” என்றும், பின் பக்கத்தில் “பாலஸ்தீனை பாதுகாத்திடுங்கள்” எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. முகத்தில் பாலஸ்தீன் கொடியை கட்டி இருந்தார். கையில் லிநிஙிஜினிவின் வானவில் கொடியும் இருந்தது. இவரது செயலால் சில நிமிடங்கள் போட்டியே நின்றது.
அவரை அங்கு வந்த பாதுகாவலர்களும் காவல்துறையினரும் மைதானத்தை விட்டே அப்புறப்படுத்தினர். மைதானத்திற்குள் நுழைந்ததற்காக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவப்பு நிற கால் சட்டை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு நுழைந்த இவர் யார்? எந்த நாட்டை சேர்ந்த வர்? பெயர் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன. அவரை கைது செய்யும் சமயத்தில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், “எனது பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன். விராட் கோலியை சந்திப்பதற்கா கவே நான் மைதானத் திற்கு உள்ளே சென்றேன். நான் பாலஸ்தீனை ஆத ரிக்கிறேன்.” என்றார்.
குஜராத் காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து சந்த்கேதா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லும் போது எடுத்த காட்சிப் பதிவில் அவரது முகமும் தெளிவாக பதிவாகி உள் ளது. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞ ரின் முழு பெயர் வென் ஜான்சன் என்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலி யாவை சேர்ந்த அந்த இளைஞர் சீன – பிலிப் பைன் மரபை சேர்ந்தவ ராவார். ஹமாஸ் உட னான போரில் பாலஸ்தீ னின் காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை நிறுத் தக்கோரி இவ்வாறு செய்தததாக தெரிவித்து உள்ளார்.
அவர் மீது அய்பிசி 447 – அத்துமீறி நுழைதல், அய்பிசி 332 – அரசு ஊழி யரை பணி செய்யவிடா மல் தடுத்தல் ஆகிய பிரிவு களின் கீழ் குஜராத் காவல் துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. தற் போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக் கிறார். பன்னாட்டு கிரிக் கெட் கவுன்சிலான அய்சிசி, விளையாட்டு போட்டிகளின்போது அரசியல் சார்ந்த போராட் டங்களுக்கு தடை உள் ளது. அதை மீறி இந்த சம்பவம் நடந்து உள்ளது.
இதற்கு முன் ரசிக மனப்பான்மையில் பலர் உள்ளே நுழைந்து இருந் தாலும், ஜான்சன் பன் னாட்டு பிரச்சினை தொடர்பான டீ சர்ட் அணிந்து உள்ளே நுழைந் தது கூடுதல் கவனத்தை ஈர்த்து உள்ளது. அவர் மீது எடுக்கப்படும் நட வடிக்கை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.