திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 5- மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன் றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர், திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 3.4.2024 அன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தண் டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதி மன்றம் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை யைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த னர். இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் சாந் தன் உயிரிழந்தார். பின்னர். உயர் நீதிமன்ற அனுமதியின்பேரில் முரு கன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மார்ச் 13ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் நேர்காண லுக்கு ஆஜரானார்கள். பின்னர், மீண்டும் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்குச் செல்ல இந்திய மற் றும் இலங்கை அரசுகளிடமிருந்து அனுமதி கிடைத்தது. பின்னர், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்ளிட்ட 3 பேரும் நேற்று முன்தினம் (2.4.2024) இரவு காவல் துறை வாகனம் மூலம் சென் னைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் அழைத்து செல் லப்பட்ட மூவரிடமும், குடியுரிமை சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அவர்கள் விமான நிலை யத்தின் உள்பகுதியில் பாதுகாப்பு டன் தங்க வைக்கப்பட்டனர்.

இலங்கைச் சென்ற சிறீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத் தில் மூவரையும் பாதுகாப்பு அதி காரிகள் அனுப்பிவைத்தனர். முன் னதாக, விமான நிலையம் வந்தி ருந்த நளினி, கணவர் முருகனை வழியனுப்பி வைத்தார். அவரது உறவினர்களும் உடன் இருந்தனர்.
இலங்கையில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத் துக்கு முருகன், ஜெயக்குமார். ராபர்ட் பயாஸ் ஆகியோர் 3.4.2024 அன்று பகலில் சென்ற டைந்தனர். அவர்களுடன் வழக்கு ரைஞர் புகழேந்தி பாண்டியனும் சென்றார்.

விமான நிலையத்தில் குடிவர வுத்துறை அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் 3பேரிடமும் விசாரணை நடத்திய பின்னர், நேற்று மாலை மூவரையும் இலங் கைக்குள் அனுமதித்தனர். இவர் கள் 3 பேரும் இலங்கையில் வட மாகாணங்களில் உள்ள உறவினர் களை சந்திக்கின்றனர். முருகன்-நளினி இணையர், இங்கிலாந்தில் உள்ள மகளுடன் சென்று வசிக்க விரும்புவதாகத் தெரிகிறது.

ஜெயக்குமார் தமிழ்நாட்டில் திருமணம் முடித்திருப்பதால், அவரது மகன், பேரக் குழந்தைகள் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், ஜெர்மனி யில் உள்ள தனது சகோதரருடன் ஜெயக்குமார் வசிக்க விரும்புவதா கவும், ராபர்ட் பயஸ் உறவினர்கள் நெதர்லாந்தில் வசிப்பதால், அவர் அங்கு செல்ல விரும்புவதாகவும் தெரிகிறது.
எனினும், இலங்கைக்கு மட் டுமே மூவரும் செல்வதற்கு, சென் னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அனுமதி வழங்கியிருந் தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகக் கூறப்படு கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *