இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி: கேரளாவில் தொடக்கம்!

Viduthalai
2 Min Read

அரசியல்

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக் குமா என்பது குறித்துப் பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் பல்வேறு துறைக ளில் அதி வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் 18 ஆண்டுக ளாக பக்க வாதத்தால் பாதிக் கப்பட்ட பெண் ஒருவர் பேச உதவியுள்ளது ஏஅய். தொழில் நுட்பம். இது மருத்துவ துறையில் விந்தையாக பார்க் கப்படுகிறது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் ஏஅய் பள்ளி தொடங்கப்பட் டுள்ளது. இதனை மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 22ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த பள்ளியில் ஆசிரியர் கள் மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற தொழில்நுட்ப அறிவு பெற்ற ரோபோ மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளது. மாணவர்கள் கல்வி கற்கும் முறையை மேம்படுத்தப் பட்ட வகையில் மாற்றும் நோக்கில் இதனை முன்னெ டுத்துள்ளது சாந்திகிரி வித்யா பவன் எனும் பள்ளி. இதன் மூலம் மாணவர்கள் தனித்துவ கற்றல் முறையை பெற முடி யும் என அந்த பள்ளி நிர் வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பாடத்திட்டங்களை கடந்து உலகத்தரம் வாய்ந்த கற்றலை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவித் துள்ளது. அதோடு புதுமை யான தொழில்நுட்பம் சார்ந்த அனுபவ ரீதியான கற்றல் முறையை மாணவர்கள் பெற இது உதவும் எனவும் தெரிவித்துள்ளது. இது மாறி வரும் சவால் நிறைந்த உலகை மாணவர்கள் எதிர்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கேரள ஏஅய் (AI) பள்ளியின் சிறப்பு

இந்த பள்ளியில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முதலில் ஏஅய் மூலம் கற்றல் அனுபவத்தை பெற உள்ளனர். கவுன்சிலிங், கேரியர் ஆலோசனை, குறிப் பிட்டவற்றை எளிதாக நினை வில் வைத்துக் கொள்வதற்கான யுக்தி போன்றவற்றை அறிவார்கள் என தெரிகிறது.

வழக்கமான பாடம் சார்ந்து மட்டுமல்லாது சிறப்பாக எழுது வது எப்படி, சிறந்த பண்பு, நேர்காணலில் சிறப்பாக செயல்படுவது, குழு விவாதம், கணிதத்தில் சிறந்து விளங்குவது போன்றவற்றில் மாணவர் களுக்கு ஏஅய் தகவல் தொழில்நுட்பம் உதவுமாம்.

மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கிடைக்கும் உதவித்தொகை குறித்து ஏஅய் தகவல் தெரிவிக்கும். மாணவர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு ஏஅய் உதவ உள்ளதாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *