புதுடில்லி, ஏப்.4- நீதித் துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் “வழக்குரை ஞர்கள் குழு” ஒன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதற்கு அகில இந்திய வழக்குரை ஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி., மற்றும் பொதுச்செயலாளர் சுரேந்திரநாத் வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருப்பதாவது:
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக் குக் கைமாறு செய்தது வெட்ட வெளிச்சமாகியுள் ளது. இந்நிலையில், நீதித் துறையைப் பாது காக்கிறோம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்து வழக்குரை ஞர்கள் குழு ஒன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதிக்கு சமீபத்தில் எழுதியுள்ள கடிதத்திற்கு அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தக் கடிதமானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை யும், அரசமைப்புச்சட்ட உரிமைகளையும், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாய கத்தையும் பாதுகாப்பதற்காக வும், நீதித்துறையின் சுதந்தி ரத்தைப் பாதுகாப்பதற்காக வும் போராடிக் கொண்டிருக் கும் வழக்குரைஞர்கள் சங் கங்கள் மற்றும் பொறுப்புள்ள வழக்குரைஞர்களுக்கு எதி ராகவும் நீதித்துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவதூறை அள்ளி வீசியிருக்கிறது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரம் ஆகியவை நம் அரசமைப் புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் அங்கமாக வும், ஜனநாயகத்தின் முது கெலும்பாகவும் திகழ்கின்றன.
இப்போதைய ஆட்சியா ளர்கள் இதன்மீது நேரடி யாகத் தாக்குதலைத் தொடுத் துள்ளார்கள். நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அரசமைப் புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக மிகவும் நுட்ப மான முறையில் சூழ்ச்சித் திட்டங்களை ஏற் படுத்தியும், நேரடியாகவும் தாக்குதலைத் தொடுத்திருக் கிறார்கள்.
நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்குத் தேவை என்று ஒன்றிய ஆட்சியா ளர்கள் கூறத் தொடங்கி இருக்கிறார்கள். உயர்நீதி மன்ற நீதிபதிகளை மாற்றுவதி லும் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது.
தலையிடும் விதத்தில் நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் அவர்களை உயர்பதவிகளில் நியமனம் செய்திடும் வேலை களிலும் மோடி அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் ஒன்றிய அரசாங்கம், உச்ச நீதிமன்ற கொலிஜியம் முறை மூலமாக பல்வேறு உயர்நீதிமன்ற தலைமை நீதி பதிகள் மாற்றல்கள் மற்றும் நியமனங்கள் செய்திடுவதை யும் அவமதித்திடும் விதத் திலும், தங்களுக்கு வேண்டிய நபர்களை மட்டுமே தெரிவு செய்திடும் விதத்திலும் நடந்து வந்திருக்கிறது. இதே போன்றே உயர்நீதிமன்றங் களின் கொலிஜியம் முறை அடிப்படையிலான நியமனங் களுக்கும் நடந்தது.
கொலிஜியம் வற்புறுத்தி யும்கூட ஆட்சியாளர்கள் செவி சாய்த்திடவில்லை. கொலிஜியம் பரிந்துரை செய் திட்ட வேட்பாளர்களை நிய மனம் செய்ய மறுத்தது. இவை அனைத்தும் நீதித் துறையின் சுதந்திரத்தைக் கடுமையாக மீறிய விஷயங்களாகும்.
இந்த விடயங்கள் தொடர்பாக இந்த “வழக் குரைஞர்கள் குழு” வாயே திறக்கவில்லை. நீதித் துறையைக் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த வழக் குரைஞர்கள் குழு இப்போது வெளியாகியுள்ள தேர்தல் பத்திரம் சம்பந்தமான அதி முக்கிய வழக்கிலும் கார்ப் பரேட் ஏகபோக முதலாளி களு டன் இணைந்து நின்று, உச்சநீதிமன்றம் மேற்படி தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தாமாகவே கடிதம் எழுதி, அவரின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது.
இந்த “வழக்குரைஞர்கள் குழுவின்” அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நாட்டிலுள்ள அனைத்து வழக்குரைஞர்களின் பொது வான கருத்து கிடையாது. நீதித்துறையை மீட்பதற்காக வந்திருக்கிறோம் என்று முகமூடி அணிந்து வந்து மக் களை ஏமாற்றும் முயற்சிகளே யாகும். இதன் முயற்சியை அகில இந்திய வழக்குரை ஞர்கள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.