முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 21- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள 4272 அடுக்கு மாடி குடியிருப்பு களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4680 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டு வதற்கான பணி ஆணை களையும், 72 கைத்தறி நெசவாளர்களுக்கு பயனாளி கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவ தற்கான பணி ஆணைகளையும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்தி றனாளிகளுக்கு குடியி ருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கூட்டுறவுத்துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச் செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங் கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங் குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங் களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப் பேட்டை மற்றும் தென்மேல்பாக் கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்ட டம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை இன்று தலைமைச் செயலகத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 14 கோடியே 86 லட் சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள திருவட்டார், கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்ட டங்கள் மற்றும் தேனியில் கூட்ட ரங்கக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅள வைக்கு விண்ணப்பிக்கும் புதிய வச தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் கே.ஆர்.பெரியக் கருப்பன், ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.