சென்னை, ஏப்.2– தமிழ்நாடு அர சில் பணியாற்றும் குரூப்-1 அதிகா ரிகள் 7பேருக்கு அய்.ஏ.எஸ். அதி காரிகளாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதி காரிகள் காலி பணியிடங்களை பொறுத்து அந்த இடத்தை குரூப்-1 அதிகாரிகள் மூலம் ஒன்றிய அரசு நிரப்புவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசில் உள்ள காலி பணியிடங்களில் 7 குரூப்-1 அதி காரிகளை அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதன்படி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் சிவசுந்தரவள்ளி, சிவகங்கை மாவட்ட வருவாய் அதி காரி மோகன சந்திரன், தமிழ்நாடு பொது வினியோக பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சதீஷ், மாநில விருந்தினர் மாளிகை தலைமை அதி காரி கந்தசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சுகுமார், தமிழ்நாடு நகர்ப் புற குடிய மைப்பு மேம்பாட்டு வாரியத் தின் செயலாளர் துர்கா மூர்த்தி, கலை ஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் தின் துணை இயக்குநர் பொற்கொடி ஆகியோர் அய்.ஏ.எஸ். அதிகாரிக ளாக தகுதி உயர்வு வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
குரூப்-1 அதிகாரிகளுக்கு அய்.ஏ.எஸ். தகுதி : தமிழ்நாடு அரசு ஆணை
Leave a Comment