தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ‘மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டில்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (1.4.2024) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
அதன்படி ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து 2 இடங்களில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாகவும், கார்கே மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் ஓரிரு இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஏப்.11ஆம் தேதி ராகுல்காந்தி தமிழ்நாடு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.