ஏழைகளுக்கான அரசு வேண்டுமா? கார்ப்பரேட்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு வேண்டுமா? ஈரோட்டில் கமலஹாசன் கேள்வி

viduthalai
3 Min Read

ஈரோடு,ஏப்.1- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரி.ணி.பிரகாஷை ஆதரித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வெப்படை பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய் தார்.

அப்போது பேசிய கமல் ஹசான், ஈரோட்டில் என் பிரச்சாரத்தை தொடங்க கார ணம் பெரியார் என கூறினார். பெரியார் பெயரை சொன்னால் தமிழ்நாட்டில் சரித்திரம் நடக் கும் என்று கூறிய அவர், உள் ளூர் கட்சி வேறுபாடுகளை மறந்து நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என எல்லாரும் கேட்டார்கள்.
நான் மறுத்தவுடன் தேர் தலில் நிற்காமல் தியாகம் செய்து விட்டார்கள் என்று கூறினார்கள். அது தியாகம் இல்லை தமிழ்நாடு காக்கும் வியூகம் என்று நான் சொன் னேன் என கமல்ஹாசன் பேசினார்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டம்
எனது கட்சிக்காரர்கள் கேட்டனர் -_ 4 சீட் கேளுங்கள் என்று. எனது கட்சிக்காரர்க ளுக்கு நான் சமாதானம் செய்து கொள்கிறேன். இங்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி என் பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவு திட் டம் காமராஜர் தொடங்கி எம்ஜிஆர் மற்றும் அதன் நீட்சி யாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி வருகிறார் என பேசிய கமல்ஹாசன், தமிழ் நாட்டில் கூலி வேலை முதல் பல வேலைக்கு வடமாநிலங்க ளில் இருந்து மக்கள் வருகி றார்கள்.
அதன் அர்த்தம் அங்கே வேலை இல்லை என கூறினார். ஏன் என்றால் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் வருகிறது. ஆனால் அங்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 7 ரூபாய் கிடைக்கிறது.

ஆனால் அங்கிருந்து கூலி வேலைக்கு தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என கமல்ஹா சன் தெரிவித்தார்.

வடமாநிலத்தவர் ஏன் வேலைக்கு வருகிறார்கள்?
தொடர்ந்து பேசிய கமல் ஹாசன்,” வளர்ச்சி என பேசு பவர்கள் உத்தரப்பிரதேசம், பீகாரில் எல்லாம் என்ன வளர்ச்சியை கொடுத்துவிட் டார்கள்.
அவர்கள் ஏன் அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார் கள். “வந்தவர்களை வாழவைக் கும் தமிழகம்” என்று ஆண்டு காலமாக தமிழ்நாடு சொல்லப் படுகிறது.
தமிழ்நாட்டின் மழை வெள் ளத்தின் போது கண்டுகொள் ளவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்தது.
பிரதமர் திருக்குறளில் பேசுகிறார். இரண்டு மூன்று தமிழ் வார்த்தை உதிர்ப்பார்.
அது எல்லாம் நாடகம். எங்களுக்கு 29 பைசா மட்டுமே கொடுக்கும் நிலையில், மற்ற மாநிலத்திற்கு வாரிக் கொடுத் தும் அவர்கள் முறையாக நிதி செலவு செய்யவில்லை.
சமையல் எரிவாயு விலை கேட்டால் வயிறு எரிகிறது.

பாஜக அடிமடியில் கை வைத்த கமல்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் அரசு வேண்டுமா? இந்திய குடியரசுத் தலைவரே ஆனாலும் அர்ச் சனை செய்யும்போது வெளியே நில்லு என்று சொல்லும் அரசு வேண்டுமா?
ஏழைகளுக்கான அரசு வேண்டுமா? அல்லது பணக்காரர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு வேண்டுமா? என்று சிந்தித்து ஒற்றை விரலில் சரித்திரத்தை மாற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்.
இது தந்தை பெரியார் மண். மானமும் அறிவும் உள்ள இடம்.
நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட் டின் திட்டங்களை இந்தியா முழுக்க அமல்படுத்த வேண் டும்” என கமல்ஹாசன் பேசி னார்.

உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்
“உதயநிதி ஸ்டாலின் ஒட்டு மொத்த இளைஞர்கள் குர லாக ஓங்கி ஒலிக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை என் னாச்சு என்று கேட்கிறார்?
ஒத்த செங்கல் தான் உள்ளது. அதையும் எடுத்துச் சென்று விட்டார்கள் என கேட்கிறார் அவர்.
அதற்கு பதில் இல்லை. ஈரோடு தொகுதியை மேம் படுத்த வேட்பாளர் பிரகாஷ் பல திட்டங்களை வைத்துள் ளார்.
அதனால் வாக்கு செலுத் துங்கள். பெரியார் இன்று இருந்து இருந்தால் டில்லிக்கு என்ன செய்தி அனுப்பி இருப் பாரோ அதை நீங்கள் தேர்தல் நாள் அன்று உங்கள் கை மய்யாக வையுங்கள்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசிற்கு உங்கள் வாக்கு களை உதயசூரியன் சின்னத்தில் செலுத்த வேண்டும்” என கேட்டு கமலஹாசன் பேசி தனது உரையை முடித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *