5-4-2024 அன்று இரவு 8 மணிக்கு பொள்ளாச்சி தொகுதி உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 27.3.2024 அன்று திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன், உடுமலைப்பேட்டை நகர செயலாளர் வேலுச்சாமி. ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன், நகர தலைவர் கலையரசன், மாவட்ட ப.க தலைவர் துங்காவி வெங்கடாசலம் ஆகியோர் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர்.