(உலக மக்கள் முன் நம்மைத் தாழ்த்த ஆரியர் எழுதி வைத்துள்ள வஞ்சக மொழிகளை அம்பலப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள்)
1. “தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”
– ‘புராதன இந்தியா’ 52ஆவது பக்கம் ரமேஷ் சந்திரட் CIEICS.
2. “தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
– “சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்“ என்ற புத்தகத்தில் ‘ராமாயணம்“ என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் உள்ளது.
3. தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடி மக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெய ராகும்.‘ஆரியன்’என்கின்றசொல்இந்தியா வின்புராதனகுடிமக்களிடமிருந்துதங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல் ஆகும்.
– 1922ஆம் வருஷம் பதிப்பிக்கப்பட்ட ‘கேம்ப்ரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில் உள்ளது.
4. ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின் பற்றவேண்டி வந்தன.
– ‘பண்டர்காரின் கட்டுரைகள்’ வால்யூம் 3, பக்கம்-10
5. ஆரியக்கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக்கடவுள்கள் வணக் கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத் தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.
– ‘ரிக்வேத கால இந்தியா’ பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.
6. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது ஆரிய கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.
– ‘ரிக்வேத கால இந்தியா’, பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.
7. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிரா மணர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக்குடிகள்.
– ‘நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா’, 1925, 2 ஆவது வால்யூம், பக். 273
8. ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
– “சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்“, வால்யூம் 2, பக்கம் 521; ஹென்றி ஸ்மித், வில்லியம் எல்.எல்.டி
9. ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள், தானவர்கள், இராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்து வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
– சி.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்., இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., “இந்திய சரித்திரம்” -பக்கம் 16-17
10. சுருங்கக் கூறவேண்டுமானால் பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப் படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம், தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டு மென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்
– 1865இல் எழுதப்பட்ட “விரிவான இந்திய சரித்திரம்” – முதல் பாகம் பக்கம் 15-ஹென்றி பெரிட்ஜ் (சரித்திர ஆசிரியர்)