காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மெகபூபா முப்தி உருக்கம்

viduthalai
2 Min Read

புதுடில்லி,மார்ச் 29- காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனைகளை ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உருக்கமாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தனது மகள் இலி திஜா முப்தியுடன் இணைந்து எழுதிய,’ இந்திய ஒற் றுமைப் பயணம் இந்தி யாவின் ஆன்மாவை மீட் டெடுப்பது’ என்ற புத்த கத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நீளம், அகலம் முழுவதும் சிறிய தாக மாறிவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள். வரலாற்றின் பக்கங் களைப் புரட்டினால், காங்கிரஸ் கட்சி குறிப் பாக ராகுல் காந்தியால் மட்டுமே ஜம்மு_காஷ்மீர் மக்களின் வலி மற்றும் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ஒற்றுமை பயண நிறைவின் போது ராகுல் காந்தியுடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவரை ‘பப்பு’ என்று இகழ்ந்தார்கள். ஆனால் அவரிடம் பேசிய போது தான் அவரது அறிவின் வீச்சைக் கண்டு வியந்தேன்.
தேசிய மற்றும் பன்னாட்டு விஷயங்கள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருப்பதைக் கண் டேன். இதை எல்லாம் அறிய எவ்வளவு பணம் மற்றும் ஆற்றல் வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் அவரை ஒரு அறி யாமை அரசியல்வாதியாக தவறாக பா.ஜ முன்நிறுத்தி வருகிறது. நாங்கள் எங்கள் உரையாடலில் மிகவும் ஆழமாக மூழ்கி விட்டோம். அதனால் 15 கிலோமீட்டர்கள் மூன்று மணிநேர நடைப்பயணம் ஒரு நொடியில் பறந்தது.

2016ஆம் ஆண்டு எனது தந்தையும், காஷ் மீர் மேனாள் அமைச்சரு மான முப்தி முகமது சயீத் காலமானதிலிருந்து வீட்டை விட்டு வெளி யேற மறுத்த எனது தாயார் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தியுடன் இணைந்து பயணத்தில் பங்கேற்றார். ஒரு இளை ஞன் பழிவாங்கப்பட்டும், திட்டப்பட்டும், இவ் வளவு ஆழமான பாசத்தைப் அவர் மீது மக்கள் பொழிந்திருப்பது எனது அம்மாவின் மன தில் எங்கோ ஒரு இடத்தை தாக்கியிருக்க வேண்டும்.
என் மகள் இல்திஜா வும், அம்மா, நானும் அவருடன் நடக்க விரும் புகிறேன் என்றார். நான் திகைத்துப் போனேன். நான் வார்த்தைகளுக்குத் திணறுவது அரிதான சந்தர்ப்பங்கள். எனக்கு அப்போது அனுமதி அளிப்பதை தவிர வேறு வழியில்லை. மூன்று தலைமுறைகளையும் கடந்தும் காந்தி குடும் பத்தால் மட்டுமே மக் களை சிரமமின்றி வசீக ரிக்க முடிந்தது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன். இவ்வாறு அதில் குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *