‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை தகவல்

1 Min Read

சென்னை,மார்ச் 28- சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக அறிவித்தீர்கள். ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை பதவி விலக சொல்லிவிட்டு தென்சென்னையில் வேட்பாளராக அறிவித்தது ஏன்? தென்சென்னையில் பிறந்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை? திருச்சியில் பிறந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை?

ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதா ராமனுக்கும் ஒரு நீதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த எல்.முருகனுக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஒரு நீதியா? இதுதான் பாசிச பா.ஜனதா. நிர்மலா சீதாராமனையும், ஜெய் சங்கரையும் மேட்டுக்குடிகளாக வைத்துக்கொண்டு எல்.முருகனையும், தமிழிசை சவுந்தரராஜனையும் வெயிலில் வாக்கு சேகரிக்க அனுப்பி யுள்ளார்கள். இதுதான் பா.ஜனதாவின் பாசிச முகம்.

நாங்கள் ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிமுக்கு தொகுதி ஒதுக்க முயற்சித் தோம். நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் முஸ்லிமுக்கு ஒதுக்க முடியவில்லை. கிறிஸ்தவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ராமநாத புரத்தில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் அய்.யூ.எம்.எல். வேட் பாளர் எங்கள் வேட்பாளர் தான். அடுத்து வரும் சட்டமன்ற, நாடாளு மன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம்
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *