அவசர கதியில் தேர்தல் ஆணையர்கள் நியமனம்! : உச்சநீதிமன்றம் அதிருப்தி

2 Min Read

புதுடில்லி, மார்ச் 24 இந்திய தேர் தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய் யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன் றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், மக்க ளவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவித்து நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இருப் பார்கள். ஆனால், சமீபத்தில் 2 ஆணையர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் மட்டுமே இருந்து வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததால், உடனடியாக இரண்டு தேர்தல் ஆணையர் களை ஒன்றிய அரசு நியமனம் செய்தது.
பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை குழு கூடி, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்தது. இவர்கள் பொறுப் பேற்ற நிலையில் மக்களவைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன நடவடிக் கைக்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட் சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர்கள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளனர்.
இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. தேர்தல் வேளையில் சர்ச்சை, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவும் மனுதாரர் தவறிவிட்டனர்” என தெரி விக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப் பட்டதற்கு தடை விதிக்க முடி யாது எனக்கூறியது. அதோடு புதிதாக நியமிக்கப்பட்ட தேர் தல் ஆணையர்கள் குறித்து எவ்வித புகார்களும் இல் லையே? எனவும் உச்சநீதிமன் றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமின்றி, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித் தால் விளைவுகள் ஏற்படலாம்.
தற்போதைய நிலையில் இடைக்காலத் தடை விதித் தால் பெரும் குழப்பம் ஏற்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணை யர் நியமனத்தில் ஒன்றியஅரசு நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தது.
தேர்தல் ஆணையர் பதவிக்கு சுமார் 200 பேர் பட்டியல் இருந்த நிலையில், அதில் 6 பேரை சில மணி நேரங்களில் எப்படி தேர்வு செய்தீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா கேள்வி எழுப் பினர்.
மேலும், புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்ந் தெடுக்கப்பட்ட நபர்களின் தகுதி, பின்னணி குறித்த முழு விவரங்களையும் தேர்வு குழுவின் அனைத்து உறுப் பினர்களுக் கும் முன்கூட்டியே தெரியப் படுத்தி இருக்க வேண்டும் என கூறியதுடன், அரசியல் சாசன பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப் படும்போது, அதன் செயல் முறை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டிது அவசியம் என்ற தங்களது அதிருப்தி யையும் பதிவு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *