மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடகமாடும் பி.ஜே.பி.க்கு
மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
புதுடில்லி, செப். 25 – தேர்தலை மனதில் வைத்து அவசரகதியில் மக ளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்றியுள்ள பி.ஜே.பி.க்கு வரும் தேர் தலில் மக்கள் சரியான பாடம் புகட்டு வார்கள் என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங் களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விடயத்தில் உலகத் தலைவர்களுக் கெல்லாம் முன்மாதிரியாகவும், அடை யாளமாகவும் திகழ்ந்த எங்கள் தலை வர் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோரால்தான் இந்த அவையில் உறுப்பினராகிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நேற்றும் இன்றும்
என்றும் என எப்போதும் ஆதரிக்கி றோம்.
சமூகப் புரட்சியாளரான தந்தை பெரியார் பெண் உரிமைக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே போராடி யவர். பெண் அடிமைத்தனத்தை ஒழித்தால்தான் ஒரு சமுதாயம் நிஜ மான முன்னேற்றத்தை அடைய முடி யும்; பெண்களிடம் சமையல் செய்யும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்று சொன்ன வர் பெரியார். மகளிருக்கான இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல பெண்களின் உரிமை என்பதை உணர்ந்த இந்தத் தலைவர்களின் முன்னெடுப்பால் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் பன்னெடுங் காலமாக வழங்கி வருகிறது தமிழ்நாடு.
ஆண்களுக்கு இணையாக பெண் களுக்கும் சமவாய்ப்பு வழங்குவதை நமது அரசமைப்புச் சட்டம் அடிப் படை உரிமையாகவே வலியுறுத்திச் சொல்கிறது. இந்தச் சட்டம் உருவா வதற்கு முன்பே பெண்களின் முக்கி யத்துவத்தை உணர்ந்து சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த இயக்கம்தான் நீதிக்கட்சி. அதன் தொடர்ச் சியாக 1927இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டப் பேரவைக்கு முதல் பெண்மணியாகத் தேர்வானார்.
1996இல் தி.மு.க. அங்கம் வகித்த ஜனநாயக முற்போக்குக் கூட்ட ணியின் முதலாவது அரசுதான் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய் தது. தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு இதே மாநிலங்களவையில் அதை அறிமுகம் செய்து நிறைவேற்றி யதும் அய்.மு. கூட்டணி அரசுதான். அந்த மசோதாவைத்தான் தங்கள் பதவிக் காலத்தில் ஒன்பதரை ஆண்டுகள் வீணடித்த பி.ஜே.பி. அரசு இப்போது மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.
வேளாண் மசோதா, சி.அய்.ஏ. மசோதா, காஷ்மீர் தொடர்பான மசோதா, என சர்ச்சைக்குரிய பல மசோதாக்களை நிறைவேற்ற முடிந்த இந்த அரசால் முக்கியத்துவம் நிறைந்த இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மட்டும் உரிய நேரத்தில் நிறைவேற்ற முடிய வில்லை.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தி.மு.க. எந்தளவுக்கு மனப் பூர்வமாக இருந்து செயலாற் றியது என்பதற்கு சில உதாரணங் களைச் சொல்கிறேன்… உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்து சட்டம் நிறைவேற்றி பின்னாளில் அது 50 சதவிகிதமாக உயர வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். சொத்தில் பெண்களுக்கு சரிபாதி உரிமை அளித்து பொருளாதார ரீதி யாக அவர்களை பாதுகாப்பாக வைத் திருந்ததும் அவரே. பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உத வித் தொகை, பேருந்துகளில் கட்ட ணமில்லா பயணச் சலுகை என பல திட்டங்களை அமல்படுத்தி வருவது தி.மு.கழக அரசுகள்தான்.
அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் என அனைவரது ஆட்சியிலும் பெண் களின் முன்னேற்றத்துக்கான மகத் தான பல நலத்திட்டங்கள் அமல் படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதல் முறையாக குடும்பத் தலைவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரி மைத் தொகை வழங்கும் தளபதி மு.க. ஸ்டாலினின்மகத்தான திட்டத்தை சமீ பத்திய உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த வகையில் பெண்களுக்கான உரிமைகளைத் தந்து சமூகத்தில் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப்பார்க்கும் அளவுக்கு தன் னிறைவு பெற்றவர்களாக அவர்களை ஆக்கியதில் முக்கியப் பங்கு வகிப்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசுதான். வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் பெண்களை இப்படி உயர்த்தி வைத்துப் பார்க்கும் திராவிட மாடல் அரசு ஒட்டுமொத்த இந்தியா வுக்கும் வழிகாட்டியாக, முன்னோடி யாகத் திகழ்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்வேன். பெண்கள் முன்னேற்றம் என்பது இப்படி இருக்க வேண்டுமே தவிர, இந்த பி.ஜே.பி அரசு இப்போது கொண்டுவந்திருக்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாபோல வேண்டா வெறுப்பாக இருக்கக் கூடாது. இந்த மசோதா இரு அவைகளிலும் இப்போது நிறைவேறி விட்டாலும் கூட இதன் பயனை அடைய இந்த நாட்டுப் பெண்கள் இன்னும் குறைந்தது அய்ந்தாண்டு காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலைதான் நீடிக் கிறது. இதற்கு மக்கள் தொகைகணக் கெடுப்பும் அதனடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பும்தடைக் கற்களாக இருக்கின்றன. அதனால் தான் இந்த மசோதாவை பல ஆண்டு களுக்கு முன்பே இந்த அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் எங் களது ‘இந்தியா’ கூட்டணியின் வலு வான கட்டமைப்பு பி.ஜே.பி.யினருக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியதால் தான் அவசரகதியில் இதைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்திருக்கிறீர்கள். திருமணம் எப்போது என்றுதான் தெரியவில்லை.
ஆனால் இந்த பி.ஜே.பி. அரசின் உள்நோக்கம் கலந்த திட்டங்களை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எவருக்கும் முழுமனதோடு நல்லது செய்ய நினைக்காத இந்த அரசுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள். இவ்வாறு கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.