கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் அடிப்படைத்தூண்கள்மீது தாக்குதல்
வரும் தேர்தல் ஜனநாயகத்துக்கு மிக முக்கியமானது
சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து
புதுடில்லி, மார்ச்.21- வருகிற நாடாளு மன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
அரசமைப்பு தூண்கள்
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் கடந்த 10 ஆண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது:
நாட்டின் ஜனநாயக அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான பாதிப்பைக் கண்டுள்ளன. இதை, அரசமைப்பு மதிப்பீடுகள் மற்றும் அரசமைப் பின் அடிப்படைத் தூண்கள் மீதான தாக்குதல் என்று நான் கூறுவேன்.
மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பது ஒருதூண், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை மற்றவை.
இந்தியா கூட்டணி
நமது மதச்சார்பற்ற ஜன நாயகத் தன்மையை தக்கவைக்கப் போகிறோமா இல்லையா என்பதை வருகிற நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்கும்.
அந்தவகையில் நாட்டின் தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவையான தேர்தல் ஆகும். இந்திய ஜனநாய கத்துக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது.
நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி உள்ளன.
தேர்தல் அரசியலும், தொகுதி பங்கீடும் கூட் டணியும் எண் கணிதமல்ல, அவை அரசியல்.எனவே, யார் வெளியேறுவது, யார் வருவது என்ற கேள்வி அல்ல, மக்கள் எந்தக்கொள்கைகளின் அடிப் படையில் இணைகிறார்கள் என்பதுதான் கேள்வி.
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் சுமுகமாக செல்கின்றன. விரைவில் முடிக்கப்படும்.
மிரட்டி அழைப்பது ஏன்?
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு நிலைகளில் எந்த முன்னேற் றமும் இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அரசின் பொருளா தாரக் கொள்கைகள் பொருளாதாரத்தில் மட்டுமன்றி மக்களின் வாழ்வாதாரத்திலும் முழுமையான அழிவுக்கு இட்டுச்சென்றுள்ளன. ஆனால், இந்த பிரச்சினைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்காமல் மதத்தின் அடிப் படையில் மக்களை பா.ஜனதா பிரிக்கிறது. விஷத் தன்மை மிகுந்த பிரசாரங்களையும், வெறுப்பையும் பரப்புகிறது. கட்சிகளை உடைத்து, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுதான் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைத்து உள்ளது. 370 அல்லது 400 இடங் களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள், எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் அவற்றை பிளவுபடுத்த முயற்சிப்பது ஏன்? அவர்களை மிரட்டி, மிரட்டி, தங்கள் கட்சிக்கு அழைப்பது ஏன்?
நேர்மையான தேர்தல்
அவர்கள் கட்சிக்கு சென்றால் ஊழல்வாதிகளும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இல்லையென்றால் அவர்கள் சிறைக்கு அனுப்பப் படுகிறார்கள். தேர்தல் பத்திரங்கள், பி.எம். கேர்ஸ் என அனைத்திலும் அவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்று இருக்கிறார்கள். இதனால் உலகிலேயே அதிக செலவு மிக்க தேர்தல் இதுவாகவே இருக்கும். அனைவருக்கும் சமமான தேர்தல் களம் இருக்காது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் உள்ளன. விவிபாட் எந்திரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த பிரச் சினையை எங்களுடைய பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எங்களின் கோரிக் கையை ஏற்கவில்லை.
-இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.