புதுடில்லி,மார்ச் 20- உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் நாடாளுமன்ற உறுப்பினரான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் நாடாளுமன்ற உறுப்பின ரான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக வாய்ப் பளிக்காது எனத் தெரிகிறது.
காங்கிரஸின் ராகு லுக்கு எதிராக பாஜகவில் அதிரடியாக களம் இறக் கப்பட்டவர் வருண் காந்தி, நேரு-காந்தி குடும் பத்தின் மற்றொரு வாரி சான இவர் பாஜகவின் மேனாள் ஒன்றிய அமைச் சர் மேனகா காந்தியின் மகன் ஆவார்.
2014-இல் சுல்தான்பூர் நாடாளு மன்ற உறுப் பினரான இவர், 2019-ல் பிலிபித் தொகுதிக்கு மாறி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆனார். 2017 உ.பி. தேர் தலில் முதல்வர் வேட்பாள ராவார் எனவும் பேசப் பட்டார்.
அங்கு யோகி ஆதித்ய நாத் முதலமைச்சரானது முதல் கட்சித் தலைமை மீது வருண் அதிருப்தி காட்டத் தொடங்கினார். 2022 உ.பி. தேர்தலுக்கு பிறகு இந்த அதிருப்தி அதிகரித்தது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி ஆட்சியை விமர் சனம் செய்து வந்தார்.
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் வருணுக்கு கட்சி வாய்ப்பு அளிக்காது என எதிர் பார்க்கப்பட்டது. அது போலவே பிலிபித்தில் வருணுக்கு பதிலாக உ.பி. அமைச்சர்ஜிதின் பிரசாத் திற்கு பாஜக வாய்ப்பு அளிக்க உள்ளது. இத னால் வருணின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருகிறது.
சமாஜ்வாதியில் வருண்..
இதனிடையே, சில வருடங்களுக்கு முன், வருண் காங்கிரஸில் இணையவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வருணின் கொள்கைகள் வேறு என்று கூறி ராகுல் இதற்குமுற்றுப்புள்ளி வைத்தார். இதனால்உ.பி. தலைவர்களில் ஒருவரான வருண், சமாஜ்வாதியில் இணைவதை தவிர வேறு வழியில்லாத நிலை உள் ளது. இது தொடர் பானகேள்விக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவுஎடுப்பதாக பதில் அளித்திருந்தார்.
பிறகு அமேதியில் வருண் சுயேச்சையாக போட்டியிடுவார் எனவும் இவருக்கு சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆதரவளிக் கும் எனவும் தகவல் பரவி வருகிறது.
வருணின் தாயான மேனகா காந்தி (வயது 67), உ.பி.யின் சுல்தான்பூர் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ளார். இவருக்கும் வரும் தேர்தலில் பாஜக வாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகு திகளில் 55 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வருண், மேனகா, ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோ ரின் தொகுதிகளுக்கு இன் னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.