“என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் ‘சக்தி’யின் ஒரு வடிவம். தாய்மார்களே, சகோதரிகளே, நான் உங்களை ‘சக்தி’ என்று வணங்குகிறேன். நான் பாரத் மாவின் ‘பூஜாரி’”
– பிரதமர் நரேந்திர மோடி
1. டில்லியில் உங்கள் வீட்டு வாசல் அருகே நீதி கேட்டு, மல்யுத்த பெண் வீராங்கனைகள் அடித்து, துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் ’சக்தி’ இல்லையா?
2. கதுவா, உன்னாவ், ஹத்ராஸ் ஆகிய இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களே, அவர்கள் ’சக்தி’ இல்லையா?
3. மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்டனரே. அவர்கள் ’சக்தி’ இல்லையா?
4.கான்பூரில் இரண்டு மைனர் சிறுமிகள் தூக்கிலிடப் பட்டனர். அவர்கள் ’சக்தி’ இல்லையா?
“பாரத மாதாவின் பூஜாரி என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே. இந்த ”சக்திகளுக்கு” நடந்த கொடுமைகள் குறித்து ஏன் மவுன விரதம் உள்ளீர்கள், என்பதை இப்போதாவது நாட்டுக்கு கூறுங்களேன்.
– கோ.கருணாநிதி