குஜராத்தில் தயாரான போதை மாத்திரைகளுடன் ஈரோட்டில் பிடிபட்ட வடமாநில நபர்

2 Min Read

ஈரோடு, மார்ச் 8 “தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு” என பாஜகவினர் திட்டம்போட்டு பிரசாரம் செய்து வரும் நிலையில், “இந்தியாவில் போதைப் பொருள் நுழைவாயில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் தான்” என திமுக பதிலடி தருகிறது. அது உண்மை என வெளிச்சம்போட்டும் காட்டும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்திவரும் வடமாநிலத்தை சேர்ந்த பரத்குமார் கைது செய்யப்பட்ட நபர்களில் ஏ1 குற்றவாளி.
குஜராத்தில் இருந்து போதை மாத்திரைகளை பார்சல் மூலம் வரவழைத்து தமிழ்நாட்டில் இளைஞர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள் ளார் வட மாநில நபரான பரத்குமார்.
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கடத்தி விற்கும் முக்கிய பகுதி பாஜக ஆளும் குஜராத் மாநிலம் தான் என்பதை சித்தோடு சம்பவம் காட்டுகிறது.
போதை மாத்திரைகள் குஜராத்தில் தயாரிக்கப் படுகிறது என்ற தகவல் குஜராத் காவல்துறைக்கு தெரியாதா?, குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள சித்தோடு வாய்க்காலேடு என்ற கிராமம் வரை போதை மாத்திரைகள் பார்சல் வந்தது ழிணீக்ஷீநீஷீtவீநீs சிஷீஸீtக்ஷீஷீறீ ஙிuக்ஷீமீணீu என்ற ஒன்றிய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் வடமாநில நபர். போதைப்பொருள் தமிழ் நாட்டில் அதிகமாக புழங்குகிறது என குற்றம்சாட்டுவது குஜராத்தை சேர்ந்த மோடி, அமித்ஷாவின் வடமாநில கட்சியான பாஜக. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா?
பாஜக ஆளும் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூகநிலையிலும் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டை களங்கப்படுத்தி சிதைக்க பாஜக சதிவலை பின்னுகிறதா? என்ற கேள்விகளுக்கு விடை காணுவது அவசியம்.

வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யும் பணிகள் காங்கிரசில் மும்முரம்
புதுடில்லி, மார்ச்.8- நாடாளுமன்ற தேர்தல் தெருங்கி வரும் நிலையில் இதில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும். பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதலாவது பட்டியலை இறுதி செய்யும் பணிகளை கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி டில்லியில் நேற்று (7.3.2024) கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சோனியா, கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலை வர்கள் கலந்து கொண்டனர். மேலும் அம்பிகா சோனி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சிங்தியோ, முகமது ஜாவைத் உள்ளிட்ட மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான ஆலோ சனைகள் நடந்தன. குறிப்பாக டில்லி, சத்தீஸ்கர். கரு நாடகா, தெலங்கானா, லட்சத்தீவு, கேரளா, மேகாலயா, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *