முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல விரும்பினால் அவர்களின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச். 5- மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
நோய் வாய்ப்பட் டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார்.
இந்த வழக்கு நீதிபதி கள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசார ணைக்கு வந்தபோது, சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங் கள் தாக்கல் செய்யப்பட் டன.

இந்த வழக்கை விசா ரித்த உயர் நீதிமன்றம், சாந்தனின் உடலை விரை வாக இலங்கைக்கு அனுப் புவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தர விட்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன்பு 4.3.2024 அன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதி மன்ற உத்தரவின்படி, சாந்தனின் உடல் இலங் கைக்கு அனுப்பி வைக்கப் பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதனையடுத்து, சாந் தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத் தரவிட்டனர்.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் இருக்கின்றனர்.

தங்களை இலங்கைக் குத் திரும்ப அனுப்பக் கோரி உள்துறை அமைச் சகத்துக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ள னர்.
அந்த கோரிக்கை நிலு வையில் உள்ள நிலையில் மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நட வடிக்கைகளை விரை வாக மேற்கொள்ள ஒன் றிய அர சுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மூவரும் தங்களுக்கான ஆவணங் களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, மூன்று பேர் தொடர்பாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறிய நீதிபதிகள், மூவரும் தனியாக மனு தாக்கல் செய்தால் பரி சீலிக்கப்படும் என தெரிவித்தனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *