பெரியாருக்குப் பின் தி.க.,
அறிஞர் அண்ணாவிற்குப் பின் தி.மு.க.,
கலைஞருக்குப் பின் கழகம்
இருக்காதென்றே ஆருடம் சொன்னோர்
மூக்கில் விரல் வைத்தே
முனகுகின்றார் இன்றே!
தமிழரின் பொற்காலம்
தளபதி தலைமையிலே!
கனவெல்லாம் நனவாகும்
திராவிட மாடல் ஆட்சியென்றே
தரணி புகழ்ந் திடவே தந்திடுவார்
இவர் என்று சங்கு முழங்கிடவே
தமிழர் வாழ்வும் தமிழர் வளமும்
பொங்கி மகிழ்ந்திட வாழ்த்துவோம்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
பொற்காலம் கண்டிடுவாய்!
கனவுகள் நனவாகும்
உழைப்பால் உயர்ந்தாய் நீ!
உழைக்கின்றாய் அயராது
உலகெங்கும் வாழும் தமிழர்
வாழ்த்து கின்றோம்!!!
வாழ்வாய் பல்லாண்டு
படைத்திடுவாய் வரலாறு
வாழிய வாழியவே!!!!
– சோம.இளங்கோவன்
தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா.