ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

viduthalai
1 Min Read

டில்லி விவசாயிகள் போராட்டம் – குறைந்தபட்ச ஆதரவு விலை தேவை: ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

புதுடில்லி, பிப்.18 விவசாயிகளின் போராட் டத்தால் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளதால் டில்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் உள்ளதாக காஜிபூர் மொத்த விற்ப னைச் சந்தையின் வியாபாரி ஒருவர் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் படி ஒன்றிய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ‘டில்லிக்கு செல்வோம்’ எனும் போராட்டத்தை சம்யுக்தகிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), கிசான் மஸ் தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் அறி வித்தன. இதையொட்டி பஞ்சாப் மாநில விவ சாயிகள் கடந்த 13-2-2024 அன்று டில்லி நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். கடந்த 13-2-2024 முதல் விவ சாயிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 5 ஆவது நாளை எட்டியது.

இந்நிலையில் டில்லி காஜிபூர் மொத்த விற்பனை காய்கறி சந்தையின் வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 15 நாள்களில் கேரட் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் விநியோக சங்கலி தடைபட்டுள்ளதால் இந்த உயர்வு ஏற் பட்டுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதால் அரசு – விவசாயி களுக்கு இடையிலான பிரச்சினை விரைவில் முடிவுக்கு வருவது அவசியம்” என்றார்.

மற்றொரு வியாபாரி கூறும்போது, “விவ சாயிகளின் போராட்டம், காய்கறி விலையில் உடனடியாக எந்த தாக்கத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. போராட்டங்கள் தொடர்ந் தால் சாலை மறியல் அதிகமாகும். பிறகு உ.பி., கங்காநகர், புனே போன்ற இடங்களில் இருந்து காய்கறி வரத்து பாதிக்கப்படும். இத னால் காய்கறி விலை உயரக்கூடும்” என்றார்.
ஒன்றிய அரசுடன் 15-2-2024 அன்று விவசாயிகள் நடத்திய 3 ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப் படவில்லை. இந்நிலையில் 4 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (18-2-2024) நடை பெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *