மூடநம்பிக்கையின் விபரீதம்

2 Min Read

நிமோனியா பாதிப்பை நீக்க மத்திய பிரதேசத்தில் 
ஒன்றரை மாத குழந்தைக்கு உடலில் 40 இடங்களில் சூடு

இந்தியா

போபால், நவ.23  மத்தியப் பிர தேசத்தின் ஷாதோல் மாவட் டத்தில் உள்ள ஹார்டி கிரா மத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள பெதல் வாட்டி பைகா என்ற பெண்ணுக்கு ஒன்றரை மாத குழந்தை உள்ளது.

குழந்தைக்கு கடந்த 4-ஆம் தேதி நிமோனியா (சளி காய்ச் சல்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள பாரம் பரியமாக சிகிச்சை அளிக்கும் ‘டாய்’ என அழைக்கப்படும் செவிலியரிடம் செல்வது வழக் கம். அவர் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குணப்படுத்த இரும்புக் கம்பி யால் சூடு வைக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். 

ஆகையால் பைகா என்ற பெண்ணும் தனது குழந்தையை ‘டாயி’டம் அழைத்துச் சென் றுள்ளார். சளி காய்ச்சல் பாதிப்பை போக்க ஒன்றைரை மாதகுழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து அனுப் பியுள்ளார். நிமோனியா பாதிப்பு குறையாததால் பல நாட்களாக அந்த குழந்தைக்கு கை, கால், கழுத்து, வயிறு என உடலின் பல பகுதிகளில் 40 முறை இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், காய்ச்சல் குறையவில்லை.

குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், அந்த குழந்தையை ஷாதோல் பகுதி யில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப் போது குழந்தையை பரிசோ தித்த மருத்துவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். பச்சிளம் குழந் தையின் உடல் முழுவதும் இரும் புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட 40 தழும்புகள் இருந்தன. விசா ரித்ததில் கிராமத்து பாரம்பரிய செவிலியரின் சூடு வைத்தியம் பற்றி கூறியுள்ளனர். 

அரசு மருத்துவமனையில் நிமோனியாவுக்கு முறையான சிகிச்சைஅளிக்கப்பட்டதால், தற்போது குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. பச்சிளம் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதேபோல் சூடு வைத்தியம் அளித்த குழந்தை இறந்த நிகழ்வும் இந்த கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து சூடு வைத்து சிகிச்சை அளித்த பூட்டி பாய் பைகா என்ற பெண், குழந்தை யின் தாய் பெதல்வாட்டி பைகா, குழந்தையின் தாத்தா ரஜானி பைகோ ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பழைய சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *