சென்னை, பிப்.14- நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில் ஜாக்கி மூலம் உயர்த்தும் பணியின் போது கோயில் பிரகாரத்தின் ஒருபுறம் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாய மடைந்த வட மாநில தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (13.2.2024) உயிரிழந்துள்ளார்.
சென்னை நங்கநல்லூர் ராம் நகர்ப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சிறீ உத்திர குருவா யூரப்பன் கோயில் உள்ளது. இங்கு லேசான மழை பெய்தாலும் கோயி லுக்குள் மழை நீர் புகுந்து தேங்கி நிற்கும் அளவிற்குக் கோயிலானது சாலையை விட மிகத் தாழ்வாக உள்ளது.
மழை நீரானது தேங்குவதால் பொதுமக்கள் யாரும் கோயிலுக் குள் செல்ல முடியாத சூழல் ஏற்படு கிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோயிலை 5 அடி உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வட மாநில பணி யாளர்களைக் கொண்டு ஜாக்கி மூலம் கோயிலை உயரப் படுத்தும் பணி கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய முன் தினம் (12.2.2024) காலை 11 மணி யளவில் வேலை பார்த்துக் கொண் டிருந்த பணியாளர்கள் சிலர் ஓய்வு எடுப்பதற்காக அறைக்குச் சென்று உள்ளனர். அப்போது திடீரென கோயில் பிரகாரத்தின் ஒருபுறம் சுவர் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிராம் (21) என்பவர் படுகாயம் அடைந் தார். இதனைக் கண்ட சக பணியாளர் கள் அவரை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக் குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து குரோம் பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக் கப்பட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று (13.2.2024) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு குறித்து ஆதம் பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வரு கின்றனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.