புதுடில்லி,பிப்.13- “கோடியக் கரை அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்று நாடாளுமன்ற மக்களவையில் கழக உறுப் பினர் திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் கேள்வி எழுப் பினார்.
இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள் பாதுகாப்பு அமைச் சர் அவர்களுக்கு கீழ்காணும் வினாக்களை எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு:
(அ) கோடியக்கரை அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படைக் கப்பல் அதிகாரியின் மீதான விசார ணையின் நிலை குறித்த விவரங்கள்;
(ஆ) அத்தகைய குற்ற மிழைத்த அதிகாரிக்கு எதி ராக அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் மற் றும் செலுத்தப்பட்ட இழப் பீடு தொடர்பான விவரங்கள்;
(இ) 22.10.2023 அன்று மாலத்தீவு கடற்படையின ரால் கைது செய்யப்பட்ட இந் திய மீனவர்களை விடுவிக்க அர சாங்கம் நடவடிக்கை எடுத் துள்ளதா மற்றும் மிழிஞி-ஜிழி-12-விவி-6376 என்ற பதிவு எண் கொண்ட இந்திய மீன் பிடிக் கப்பலுக்கு விதிக்கப் பட்ட அபராதத்தை தள்ளு படி செய்ததா, அப்படியா னால், அதன் விவரங்கள்;
(ஈ) 28.10.2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப் பட்ட மிழிஞி-ஜிழி-10-விவி-860, மிழிஞி-ஜிழி-10-விவி-985, மிழிஞி-ஜிழி-10-விவி-915, மிழிஞி-ஜிழி-10-விவி-717 ணீஸீபீ மிழிஞி-ஜிழி-10-விவி-972 என்ற பதிவு எண் கொண்ட 5 மீன்பிடி படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள் ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதன் அடுத்த நடவடிக்கை என்ன?
அதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் மாநில அமைச்சர் அஜய் பட் அவர்கள் அளித்த பதில் வருமாறு:
(அ) &(ஆ) விசாரணை 18 டிசம்பர் 2022 அன்று நிறைவ டைந்தது. இந்திய கடற்படை அதிகாரிக்கு எதிராக நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இழப்பீடாக துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியைச் சேர்ந்த காசி ராஜன் மகன் வீரவேலுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட் டது. சிறு காயங்களுக்கு உள் ளான மேலும் 6 மீனவர்களுக்கு ரூ.1.20 லட்சம் (ஒரு மீனவருக்கு ரூ. 20,000/-வீதம்) முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப் பட்டது
(இ): மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தின் நெருக்க மான கண்காணிப்புக்குப்பிறகு, மிழிஞி-ஜிழி-12-விழி-6376 என்ற மீன்பிடிக் கப்பலில் இருந்த 12 இந்திய மீனவர்களும் பத்திர மாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கப்பலுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மாலத்தீவில் உள்ள சம்பந்தப்பட்ட அதி காரிகளுடன் பேசி நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(ஈ) கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களில் 36 பேர் நவம்பர், 2023 இல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் மற்றும் 1மீனவர் 2022 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் மிவிஙிலி அய்த் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் 02 ஆண்டுகள் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உரிய அதி காரிகளுடன் 05 மீன்பிடி படகுகளை விடுவிக்க தூத ரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
-இவ்வாறு அமைச்சர் அஜய் பட் பதிலளித்தார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் செ.இராமலிங்கம் கேள்வி

Leave a Comment