புதுடில்லி, பிப்.13 வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேற்றப்படாததால் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் டில்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அழைப்பை ஏற்று, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு சென்று கொண்டு உள்ளனர். இதில் பஞ்சாப் விவசாயிகள் மட்டும் 10 ஆயிரம் டிராக்டர்களில் செல்கின்றனர். இவர்களை டில்லி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.