ஆளுநர் பதவிக்கு ஒரு அவமான சின்னம் ஆர்.என்.ரவி!

2 Min Read

கே.எஸ்.அழகிரி கடுங்கண்டனம்

சென்னை,பிப்.13– தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண் டும் என்ற மரபின் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என். ரவி அழைக்கப்பட்டி ருந்தார்.
ஆளுநர் உரையும், அவருக்கு முன் கூட்டியே வழங்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், உரையாற் றுவதற்கு சட்டப் பேரவைக்கு வந்த அவர், தமது உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளி நடப்பு செய்தது மிகுந்த கண்டனத்திற் குரியது.
சட்டப் பேரவைக்கு அவரை அழைத்து வரும் போது தேசியகீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உரை முடிந்து இறுதியில் தான் தேசியகீதம் பாடப் படும். அந்த மரபுக்கு மாறாக, தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயலாகும்.
தமிழ்நாடு ஆளுநரை பொறுத்த வரை நியமிக்கப் பட்டது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பலநிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்திக் கொண்டு, சர்ச்சைக்குரிய கருத் துகளையும் வெளியிட்டு வருகிறார். காந்தியாரில் தொடங்கி எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது நடவடிக்கைகளை பார்க்கிற போது, ஆளுநர் பதவிக்கே ஒரு அவமானச் சின் னமாக திகழ்கிறார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள் தான் தமிழ்நாட்டின் நன் நாளா கக் கருதப்பட வேண்டும். அந்த அள விற்கு தமிழ்நாட்டு மக்களின் வெறுப் புக்கும், கசப்புக்கும் ஆளாகியிருக்கிற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்கிற வகையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை மக்கள் வெறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏதோவொரு வகையில் ஆளுநரின் நடவடிக்கைகளினால் ஏற்படுகிற எதிர்ப் பில் தமிழக பா.ஜ.க. கடுமையான பாதிப் புக்கு உள்ளாகி வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் மீது தமிழ்நாட்டு மக்க ளுக்கு கடும் வெறுப்புதான் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழ்நாடு ஆளுந ரின் அரசமைப்புச் சட்ட விரோத நட வடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
-இவ்வாறு அவர் தனது கண் டனஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *