புதுடில்லி, பிப். 11- “மதவெறி ஊட்டி, மக்களைப் பிளவுபடுத்தி, நாட்டை பின்னோ க்கிக் கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, 2024 தேர்தல் ‘வாட்டர்லூ’-ஆக (முடிவுகட்டும் போர்க்களமாக) இருக்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார்.
“கடவுள் ராமின் பெயரால் மக்களை ஏமாற்ற பா.ஜ.க. முயற்சிக் கிறது; எதிர்க்கட்சிகளுக்கும் ராம் சொந்தக்காரர்தான்.. எங்களின் ராம், ‘காந்தி ராம்’, ஆனால், பாஜக – சங்-பரிவாரங்கள் கைகளில் இருக்கும் ராம், ‘நாது ராம்’” என்றும் ஜான் பிரிட்டாஸ் காட்டமாக தெரிவித்துள் ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின்மீது மாநிலங்களவையில் 5.2.2024 அன்று ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய ஆவேச உரை வருமாறு:
ஜோதிடர்கள் அறிவியலைக் கற்பிக்கும் அவலம்
குடியரசுத் தலைவர், தன் உரை யை பாஜக-வின் தேர்தல் அறிக்கையைப் படிப்பதுபோலவே படித்த தற்காக நான் கொஞ்சம் வருத்த மாக இருக்கிறேன். எதிர்பார்த்த தைப் போலவே, அயோத்தி குறித்து மூன்றுமுறை அவர் குறிப் பிட்டிருக்கிறார்.
ஆளும் தரப்பில் யார் பேசினாலும் அயோத்தியைக் குறிப்பிடாமல் பிரதமரைக் குறிப்பிடாமல் எவருடைய பேச்சும் முழுமை பெறுவ தில்லை. நாம் மிகவும் சிரமமான காலத்தை கடந்து கொண்டி ருக்கிறோம்… ஜோதிடர்கள் எல்லாம் இப்போது நமக்கு அறிவியலைக் கற்பிக்கிறார்கள்.
சட்டத்தை மதிப்பவர்களா பா.ஜ.க., சங்-பரிவார் கூட்டம்?
இப்போது திடீரென்று பாஜக சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவதாக மாறியிருக்கிறது. பிரான் பிரதிஷ்டா நடைபெற்றபோதுகூட அவர்கள் (பிரதமர் மோடி) உச்ச நீதிமன்றம் குறித்து பேசியிருக்கிறார்கள். அவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட மறதி நோயால் (selective amnesia) பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, என்ன? அப்படித்தான் தெரி கிறது.
உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் என்ன சொல்லியிருந்தது? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வழங்கிய அந்த அமர்வாயத்தில் அமர்ந்திருந்த நீதிபதி இங்கே இப்போது நம் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். எப்போதாவது அவரை நான் இங்கே பார்ப்பேன். இன்று அவரை நான் இரு நிமிடங்கள் பார்த்தேன். அதன்பிறகு அவரைக் காணவில்லை.
இதே உச்சநீதிமன்றம் ‘அங்கே (பாபர் மசூதி இடிப்பில்) சதி நடந்திருக்கிறது, திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது, மட்டுமீறிய (சட்ட)மீறல்கள் நடந்து ள்ளன என்று சொல்லவில்லையா? “1949-இல் பாபர் மசூதி (இரவோடு இரவாக குழந்தை ராமன் சிலைகள் கொண்டுபோய் வைக்கப்பட்டது) இழிவுபடுத்தப்பட்டது, முஸ்லிம்கள் வெளி யேற்றப்படுவதற்கு வழி வகுத்தது மற்றும் (1992) டிசம்பரில் அது அழிக்கப்பட்டது, இது சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறுவதாக அமைந்தது’ என்று கூறியிருந்தது.
ஆனால், திடீரென்று அவர்கள் (பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்) அதைப்பற்றி மறந்துவிட்டார்கள். அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபற்றி மறந்துவிட்டார்கள்.
அன்பு, இரக்கம், நல்லிணக்கம் கொண்டவர் ‘காந்தி ராம்’
இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சோகமான – இக்கட்டான நிலையைப் பாருங்கள். அவர்கள் (சங்பரிவார்கள்) அனை வரும் ‘ராமர்’ குறித்துப் பேசுகிறார்கள். எங்களுக்கும் ‘ராமர்’ சொந்தக்காரர்தான். எங்களுடைய ‘ராம்’ காந்தியாரின் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் ‘ராம்’. நீங்களும் (பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்கள்) ‘ராமை’ பெற்றிருக்கிறீர்கள். ஆனால், அந்த ராமிற்கு ஒரு சிறிய அடைமொழி உண்டு. அது ‘நாது’ ராம். அதுதான் வேறுபாடு. எங்கள் ராமருக்கும் உங்கள் ராமருக்கும் அதுதான் வித்தியாசம்.
மதகுரு பிரதமராகி விட்டாரா; பிரதமர் மதகுரு ஆனாரா?
இப்போதெல்லாம் நம்மால் பிரதமரையும், பிரதான மத குருவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. நம் பிரதமர்தான் பிரதான மத குருவாக இருக்கிறாரா அல்லது பிரதான மத குருதான் நம் பிரதமராக இருக்கிறாரா? என்று எனக்குத் தெரியவில்லை. ஓர் அரசியல் நிகழ்ச்சி நடை பெறுகிறபோது அது மத நிகழ்வாக மாற்றப்படுகிறது. அது ஒரு மத நிகழ்வாக இருந்தால், பின் அது ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றப்படுகிறது.
காந்தியார் அப்படிப்பட்டவர்களைக் குறித்து (போலி பக்தர்கள்) தன்னுடைய ‘ஹரிஜன்’ இதழில் துல்லியமாக எழுதியிருக்கிறார். ராமரின் பெயரை உச்சரித்துக் கொண்டு, ராவணன் பாதையைப் பின்பற்றுவது, பயனற்றதைவிட மிகவும் மோசமான நடைமுறையாகும். இது சுத்த பாசாங்குத் தனம். உலகத்திற்காக ஒருவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள லாம், ஆனால் வல்லவனை ஏமாற்ற முடியாது. நீங்கள் ராம பிரானை ஏமாற்ற முடியாது. ஏனெனில் நீங்கள் ராமரின் பெயரை அடிக்கடி கூறினாலும், உங்கள் ஒரே நோக்கம் ராமரின் பெயரைச் சொல்லி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை.
சங்கராச்சாரியார்கள் மீது ரெய்டை ஏவி விடுவீர்களா?
அயோத்தியின் பிரான் பிரதிஷ்டாவில் கலந்து கொள்ளாத தற்காக அவர்கள் எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள். அடடா, அய்யகோ, சங்கராச்சாரியார்களும்தான் அதில் கலந்து கொள்ளவில்லை. அவர்களை நோக்கி அமலாக்கத் துறை யினரையும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தினரையும் அனுப்புவீர்களா? சங்கராச்சாரியார்கள் அனைவருமே அரசியல் நிகழ்வாக மாற்றப்படும் இதில் (அயோத்தி விழாவில்) பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். நீங்கள் அயோத்தியில் விசிறிவிட முயற்சித்த அரசியல் நாடகத்தின் ஓர் அங்கமாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.
நாட்டில் நிலைமை மிகமோசமாக மாறியிருக்கிறது. ஒரு நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் பெண்மணி ஒருவர் சமூக ஊடகத்தில் இந்தியாவைப் பாதுகாத்ததற்காக கோட்சேயைப் புகழ்ந்து, பதிவேற்றம் செய்திருக் கிறார். இது எப்படி நடந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு கல்வி யாளர்களுக்கு இவ்வாறு உணர்ச்சிகள் வரக்கூடிய அளவிற்கு நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சுமார் அய்ந்தாண்டு களுக்கு முன் இதுபோன்ற நிலைமையை நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? இவ்வாறு நாடு போய்க் கொண்டிருக்கிறது. இன்று 5-ஆம் தேதி. நேற்று 4-ஆம் தேதி. அதாவது 4ஆம் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இந்த நாளில்தான் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்த நாளாகும்.
செங்கோல், சிம்மாசனத்தை
அடுத்து கோமாளிகளும் அணிவகுப்பார்கள்
அடுத்து என்னை மிகவும் வருத்த மடையவைத்த விஷயம். செங்கோலுக்குப் பின்னே அவர் (குடியரசுத் தலைவர்) அணி வகுத்து வந்ததைப் பார்க்கும்போது நான் மிக வும் வருத்தம் அடைந்தேன். நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா, என்று? இந்த நாட்டை (மோடி அரசு) மீண்டும் மன்னராட்சி காலத்திற்குக் கொண்டுசெல்ல விரும்புகிறதா? மீண்டும் செங்கோலைக் கொண்டுவந்ததன் மூலம் நீங்கள் வல்லபாய் பட்டேலுக்கு அநீதி இழைத்திருக்கிறீர்கள்.
நம் பிரதமர், ஓர் அமைப்பின் முன் அல்லது ஒரு நிறுவனத்தின் முன் சாஷ்டாங்கமாக விழும்போதெல்லாம் எனக்கு பயம் வந்துவிடு கிறது. ஏனென்றால், பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதும், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் படிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
தற்போது, செங்கோல்களும், சிம்மாசனங் களும் திரும்பி வந்திருப்பதால் அரசவை கோமாளிகளும் திரும்ப வரு வார்கள். மன்னராட்சி திரும்ப வரும்போது, அரண்மனை கோமாளிகளும் திரும்ப வருவார்கள். இது குடியரசுக்கு அவமானமாகும்.
இப்போது, நான் சில தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு வருகிறேன். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது
மணிப்பூர் மக்களுக்கு பிரான் பிரதிஷ்டா எப்போது?
பிராண பிரதிஷ்டா என்பது தொடர்பான பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை. ஏனெனில் இந்தக்காலத்தில் மனிதர்களில் பலர் கடவுளுக்கு உயிர் கொடுக்க விரும்பு கிறார்கள். அதுதான் அங்கே நடந்திருக்கிறது. ஆனால் பிரதமரின் பிரதான கடமை என்பது, அவர் நாட்டின் குடிமக்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும், கடவுள்களுக்கு அல்ல. அவர் தன் கடமைகளைக் கறாராகச் செய்ய வேண்டும். அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். அங்கே யுள்ள குடிமக்களுக்கு அவர் பிராண பிரதிஷ்டா செய்ய வேண்டும். அதைத்தான் அவர் முதலில் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக ஒருசில வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் நாடகத்தை உருவாக்காதீர்கள்.
ஆர்எஸ்எஸ் – பாஜக, இந்த நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்களை ஒவ்வொன்றாக கலைத்துக் கொண் டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக இதனைச் செய்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிலைக்குழுக்கள் எல்லாம் என்னாயிற்று?
தோண்டிக்கொண்டே சென்றால்
ஆப்பிரிக்கா வரை செல்ல வேண்டும்
இப்போது ஒவ்வொரு மசூதியாக தோண்டத் தொடங்கி யிருக்கிறீர்கள்? எவ்வளவு தூரம் தோண்டுவீர்கள். நீங்கள் தோண்டும் போது, நீங்கள் புத்த விகார்களையும், சமண விகார்களையும் பார்ப்பீர்கள். மேலும் தோண்டினால், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போவீர்கள். மேலும் தோண்டினால் ஆப்பிரிக்காவிற்குப் போவீர்கள். அங்கிருந்துதான் நமது மூதாதையர்கள் வந்தார்கள். எனவே, இவ்வாறு தோண்டு வதன் நோக்கம் என்ன?
பொய்யான புள்ளிவிவரங்கள் யாரை ஏமாற்றுவதற்கு?
அய்க்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 விழுக்காடாக இருந்தது. இப்போது பத்தாண்டுகள் கழித்து அது 5.9 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் வறுமையிலிருந்து 25 கோடி மக்களை மீட்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். உண்மையான சித்திரம், உலகப் பசி – பட்டினி அட்ட வணையில் பிரதிபலித்திருக்கிறது. அதே போன்று மனிதவள வளர்ச்சி அட்டவணை அல்லது பத்திரிகை சுதந்திரம் குறித்த அட்டவணை ஆகியவற்றைப் பார்த்தோமானால் நம் நாட்டின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியும். மீடியா (Media) என்பது மோடியா (Modia) வாக மாற்றப் பட்டு விட்டது.
மாநிலங்களை வதைப்பதற்கு எதிராக டில்லியில் போராட்டம்
மாநிலங்களை பட்டினிபோட்டு வதைப்பதற்கு எதிராக கேரளா மற்றும் கருநாடகா நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.
‘சப்கா சாத், சப்கா விகாஷ்’ (அனைவரும் ஒன்றிணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி யைப் பெறுவோம்) என்று நீங்கள் கூறும்போது உங்கள் நோக்கம் மக்களைப் பிளவு படுத்தி, மத வெறி ஊட்டி, நாட்டைப் பிளவுபடுத்தி, நாட்டை மத்திய காலத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதாகும். இதை நாங்கள் அனு மதிக்கமாட்டோம். 2024 தேர்தல் உங்களுக்கு வாட்டர்லூ-ஆக (முடிவுகட்டும் போர்க்கள மாக) அமைந்திடும்.
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.