6.2.2024 அன்று தஞ்சை நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவரும் ,மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.பரசுராமன் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று (8.2.2024) இரகுமான் நகர் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்னாரது படத்திற்கு மாலையணிவித்து ,துணைவியார் விசயலட்சுமி, மகள் மருத்துவர் ப.பல்லவி, மகன் வழக்குரைஞர்
ப.பவித்திரன்ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கரன்,வெள்ளூர் முருகேசன்,பேரா.குட்டிமணி , ஒருங்கிணைப்பாளர்கள் இரா.செயக்குமார், உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில மாணவர்கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்டத்தலைவர் வழக்குரைஞர்
சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), நரேந்திரன் (நகர செயலாளர்), டேவிட் (நகர துணைச் செயலாளர்), செ.தமிழ்ச்செல்வம் (தஞ்சை ஒன்றிய செயலாளர்), உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் நல்.பரமசிவம், நெல்லுப்பட்டு.அ.இராமலிங்கம், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன், அழகு.ஆ.இராமகிருட்டிணன், பிரவுசர் புத்தக உலகம் ந.மணிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இசைப்பிரியா குட்டிமணி ரூ.100/, நன்கொடை வழங்கினார்.
நன்கொடை

Leave a Comment