புதுடில்லி,பிப்.5- பிரதமர் மோடி தரும் உத்தரவாதம் என்பது ‘வேலை யின்மைக்கான உத்தரவாதம்’ என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“நமது நாட்டில் கோடிக் கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டு களில் பா.ஜ.க. அரசு பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
கடந்த ஜூலை 2022-இல் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளை ஞர்கள் வேலைக்காக விண்ணப் பித்ததாகவும், ஆனால் 7 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தது. அதாவது சுமார் 21.93 கோடி தகுதியுள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி அளித்த பா.ஜ.க. அரசால் ஏற்கெ னவே உள்ள வேலைகளை வழங் கவோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. தேர்தலில் பிரதமர் உத்தரவாதம் அளிக்கிறார். உண்மையில், அவரது உத்தரவாதம் என்பது ‘வேலையின்மைக்கான உத்தரவாதம்’ ஆகும்.” இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.