சென்னை, பிப்.5- பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதன் கட்டுமானங்களின் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை அய்.அய்.டி. நிபுணர்கள் குழு பரிந்துரைகளை செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் சென்னையில் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் கட்டுமான நிறுவனமாகிய ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சஷன்ஸ்லிமிடெட் சென்னை சாலி கிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட் மின்ஸ்டர் குடியிருப்பு வளாகத்தை இடித்து மீண்டும் கட்டுவதற்கான முடிவை அறிவித்துள்ளது.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தன் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளது. அய்.அய்.டி. மெட்ராஸின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைக்குப் பிறகு இந்த முடிவு உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியா முழுவதும் 21,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகளை ஜெயின் ஹவுசிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 200க்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர்தர பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம்
Leave a Comment