அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிவிட்டோம்’ என ஆர்ப்பரிக்கும் பா.ஜ.க.வினர், அயோத்தி அமைந்திருக்கிற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க முன்வர வேண்டும்.
தேசியக் குற்ற ஆவணக் காப்ப கத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாக நடந்திருக்கின்றன. கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை என 65,743 சம்ப வங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
இது 2020 ஆம் ஆண்டில் 49,385 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 56,083 ஆகவும் இருந்திருக்கின்றன. பா.ஜ.க. சாமியார் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பதை, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன.
அதேவேளையில் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக சென்னை இருக்கிறது என்பதையும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் உறுதி செய்கின்றன. 2022ஆம் ஆண்டில் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 736 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 874-ஆக இருந்திருக்கிறது.
– முரசொலி, 1.2.2024