சென்னை,அக்.14- சென்னையில் இன்று (14.10.2023) மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.10.2023) சென்னை விமான நிலையத்தில், புத்தகம் வழங்கி வரவேற்றார். தி.மு.க. பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், திமுக துணைப்பொதுச்செயலாளர், மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.
சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
Leave a Comment