லக்னோ, ஜன. 21 இந்தியா வின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் சாமியார் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள மதரசாக்களில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் 21,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வேலையை இழக்க உள்ளதாகவும் உத்தரப்பிரதேசத்தின் மதரஸா கல்வி வாரியத் தலைவர் இப்திகார் அஹ மது ஜாவேத், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய மக்கள் தொகை யில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் 14 சதவீதம் உள்ளனர். உத்த ரப்பிரதேச மக்கள் தொகை யில் இவர்கள் அய்ந்தில் ஒரு பகுதியினர். மோடி தலைமையிலான பாஜக அரசும், அதன் துணை அமைப்புகளும் முஸ்லிம்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தி துன்புறுத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கள் தொட ர்ந்து கூறிவரு கின்றன. ஆனால், பாஜக இந்தக் குற்றச்சாட்டை இன்றைக்கும் மறுத்து வருகிறது.
ஒன்றிய அரசு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மதரசாக்களில் தர மான கல்வியை வழங்கு வதற்கான திட்டத்திற்கு நிதியளிப்பதை நிறுத்தி யது. நிதி யளிப்பதை நிறுத்துவதற்கான கார ணம் ஏதும் அரசால் தெரி விக்கப்படவில்லை. ஒன் றிய அரசு, 2022-ஆம் ஆண்டு அக்டோபரில்தான் திட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து மாநிலங்களுக்கு தெரிவித்தது என்பதைச் சுட்டிக்காட்டி இப்திகார் அஹமது ஜாவேத், கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி, இஸ்லா மிய சமூகத்தினரின் குழந் தைகள் நவீன கல்வியை பெறவிரும்புவதாகக் கூறினார் எனக் குறிப் பிட்ட இப்திகார் அஹ மது ஜாவேத், மதரசாக் களை மூடக்கூடாது என் பதற்காக தாம் அதிகாரி களுடன் பேசி வருவதாகக் கூறியதோடு, உத்தரப் பிரதேச அரசு கடந்த ஏப்ரல் முதல் மதரசாவில் பணி யாற்றும் ஆசிரியர் களுக்கு ஊதியமாக வழங்க வேண்டிய தனது பங்குத் தொகையைச் செலுத்தவில்லை என்றும் ஜனவரி மாதத்தில் முழு ஊதியத்தையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக வும் கூறினார்.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள் ளிட்ட பாடங்களைக் கற் பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அரசு ரூ.12,000, மாநில அரசு தனது பட் ஜெட்டிலிருந்து ரூ.3,000 வழங்கிவந்தது. இதுகுறித் துப் பேசிய பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த மதரசா ஆசிரியர் சமி யுல்லா கான். “கடந்த 14 ஆண்டு களாக என் பணி இது தான். தற்போது எனக்கு வயதாகிவிட் டது. இனி நான் எந்த வேலைக்குச் செல்ல முடி யும்” என்று கேட்டார்.
மற்றொருபுறத்தில் அசாம் மாநில அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் குழுக்களின் எதிர்ப்பையும் மீறி, நூற் றுக்கணக்கான மதரசாக் களை வழக்கமான பள்ளி களாக மாற்றுகிறது. மதரசாக்களுக்கு நிதி யளிப்பதை அனைத்து மாநி லங்களும் நிறுத்த வேண்டும் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா கூறியுள் ளார். இந்தியாவில் உள்ள பல மதரசாக்கள் முஸ்லிம் மக்களின் நன்கொடை களை நம்பியுள்ளன. மற்றவை அரசாங்கத் தின் உதவியை நம்பியே உள் ளன.