ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கணிப்பொறி வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டிக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறி வழங் கினர்.

அண்மையில் நடைப்பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு குழுவில் பள்ளிக்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி கோரிக்கை வைத்தார். 

அப்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறி வழங்குவ தாக உறுதியளித்தன. 

அதன்படி தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப் பொறியை பள்ளி மேலாண்மை குழு மூலமாக கல்வியாளர் மருத் துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணைத் தலைவி வேதநாயகி, வார்டு  உறுப்பினர் கலாராணி, உறுப்பி னர்கள் ராஜலட்சுமி, ருக்மணி, சித்ரா, மகேஸ்வரி, திவ்யா செல்வி, தனலெட்சுமி, சரண்யா, அன்பு நதி, திவ்யா செல்வி, மகேஸ்வரி, சத்யா, சுஜாதா தேவி, ராஜாங்கம், பழனிவேல் , ரஞ்சிதா, நிர்மலா, தேவிகா உள்ளிடோர் தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியர் பெருமக்க ளிடம் வழங்கினர். 

கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழுவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை ஆசி ரியர் அனைவரையும் வரவேற்று பேசும்போது கடந்த ஆண்டு பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்குத் தேவையான அய்ந்து லட்சம் மதிப்புள்ள கல் கல்வி சீரில் கற்பித்தல் உபகரணங் களான தொலைக்காட்சி ஸ்மார்ட் போர்டு உள்ளிட்டவைகளும், பேன்கள், மேஜைகள்,  நாற்காலி கள் அறிவியல் அறிஞர்கள் படங்கள், பீரோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.

தற்போது பள்ளிக்கு கணிப் பொறி வழங்கிய பள்ளி மேலாண்மை குழுவுக்கு எங்களது பள்ளி சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினார். இல்லம் தேடி கல்வி மய்ய ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா பேசும்போது பள்ளி மேலாண்மை குழு மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. 

பள்ளி மேலாண்மை குழுவில் கற்பித்தல் முறைகளையும் பள் ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செயல்படுத்துவ தற்கு வாய்ப்பை பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தி வருகிறது.

நம்முடைய பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு செய்து வருவதற்கு வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன் என்று பேசினார். 

இந்நிகழ்வில் பெற்றோர் களும் அன்பு நதி, ,ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, தனலட்சுமி கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *