17.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பொதுத் தேர்தலுக்கு முன்பான ராகுல் காந்தியின் தற்போதைய நீதிப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்திட அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
♦ ராகுல் பயணம் நாகாலாந்து மாநிலத்தை அடைந்தது. நாகா ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றிட வேண்டும் என பழங்குடி அமைப்பு ராகுலிடம் கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல் சென்னை:
♦ அயோத்தியின் ராமன் கோயில் திறப்பு விழா நாளில் நாட்டில் உள்ள அனைவரும் ராம பஜனை பாட வேண்டும் என்று கூறிய பாடகி சித்ராவின் பேச்சுக்கும் கடும் கண்டனம். மத நம்பிக்கை தனி நபர் சார்ந்தது என சாடல்.
♦ தற்போது மதுராவில் உள்ள ஹாகி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் இந்து கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடம் என்றும், இது குறித்து அறிவியல் ஆய்வுக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
♦ காவி உடையுடன் திருவள்ளுவர் இருப்பதாக படத்தை வெளியிட்டு, சனாதான பாரம்பரியத்தில் வந்தவர் என ஆளுநர் ரவி, பதிவிட்டதன் எதிரொலியாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறளோவியம் தந்த திருவள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் எக்ஸ்-ல் பதிவு.
♦ ஒன்றிய தொழில் மற்றும் உள்நாட்டு வணிகத் துறையின் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின்படி, தொடக்க நிலை வணிகங்கள் (ஸ்டார்ட்அப்) துவங்குவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என அறிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ம.பி. காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூரின் மனுவை ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.
– குடந்தை கருணா