மும்பை,ஜன.10- மனிதநேய பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்க ளின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் 24.12.2023 அன்று மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது
நிகழ்வுக்கு மும்பை திராவிடர் கழக தலைவர் பெ .கணேசன் தலைமை வகித்தார் முன்னதாக மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்பு கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பெரியார் படத்துக்கு முலூண்ட் ஆ.பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்தார் தொடர்ந்துகூட்டத் தலைவர் 50ஆவது ஆண்டு நினைவு நாளில் பெரியார் ஆற்றிய பணிகளையும், பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்க வரலாற்று செய்தி களை நினைவு கூர்ந்து பேசினார்.
தொடர்ந்து மும்பை கழக பொருளா ளர் அ.கண்ணன், மகிழ்ச்சி மகளிர் பேரவை தலைவர் வனிதா இளங்கோவன் ,ஜெய் பீம் பவுண்டேசன் நிர்வாகி தோழர் நித்தியா னந்தம், தி.மு.க. தோழர் அழகையா,மும்பை பகுத் தறிவாளர் கழக தலைவர் அ.இரவிச்சந்திரன் உரைக்குப்பின் இறுதி யாக லெமூரியா அறக்கட் டளை தலைவர் சு.குமண ராசன் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் சிறப்புரையை மிகச் சிறப்பாக நிகழ்த்தினார்
இறுதியில் திராவிடர் கழக தோழர் செயல்வீரர் பெரியார் பாலா நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சி யில் சோ.ஆசைத்தம்பி, வாசுகி இசைச்செல்வன், ராஜா குட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் என். வி. சண்முகராசன், அலி முகமது, பெரியார் பிஞ்சு அறிவு மலர், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.