உயிர்வாழ முடியாத பகுதியானது காசா! உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்: அய்.நா. அறிக்கை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காசா, ஜன. 8- “காசா பகுதி வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள் ளது; பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளது; மனிதத்துவத் தின் மிக மோசமான நிலையை காசா சந்தித்து வருகிறது” என்று அய்க்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர் மார்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றில் மேலும் அவர் குறிப் பிட்டிருப்பதாவது: “ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்து விட் டன, 90 நரக நாட்கள் கடந்துவிட் டன. காசா தற்போது மனிதர்கள் வாழ் வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறி விட்டது. அங் குள்ள மக்கள் அன்றாடம் உயி ருக்கு ஆபத்தான சூழலில் வாழ் கின்றனர்.
உணவுக்காகவும் குடி நீருக் காகவும் வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாத பஞ்சத்தை பாலஸ்தீ னர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியா கிக் கொண்டிருக்கின்றனர். திறந்த வெளியில் மாறுபாடுகளுட னான வெப்பநிலையில் மக்கள் தங்கியுள்ளனர். குறைவான மருத்துவ மனைகளே செயல் பாட்டில் உள்ளன. தொற்று வியாதிகள் பரவியுள்ளன.

மருந்துப் பொருட்கள் பற் றாக்குறை நிலவுகிறது. உயிர் பிழைப்போமா என்ற கேள்விக் குறியுடனேயே நாள் தோறும் 180 குழந்தைகள் பிறக்கின் றன. மனிதத்துவத்தின் மிக மோச மான நிலையை காசா சந்தித்து வரு கிறது. ஆனால் இந்த உலகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கி றது. காசாவிற்கு மனிதாபிமான உதவி களைச் செய்வதற்காக செல்வோ ருக்கும், 20 லட்சம் மக்களுக்கு உதவு வது என்பது பெரும் சவாலாக உள் ளது. இதுவரை அய்.நா உதவிக் குழு வைச் சேர்ந்த 142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தொடங்கியிருக் கவே கூடாது.
இப்போது இதனை முடிக் கும் காலம் நெருங்கிவிட்டது. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். காசா மக்களுக்காக மட்டு மல்ல இனிவரும் சந்ததி களை மனதில் கொண்டும் போரை நிறுத்த முற்பட வேண் டும்.

இந்த 90 நாட்களும் நரக நாட்களே. நடந்தவை எல்லாமே மனி தாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே. அனைத் துத் தரப்புகளையும் ஒன்றி ணைத்து பன்னாட்டு சட் டத்தின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்பாவி பொது மக் கள் பாதுகாக் கப்பட வேண்டும். அவர்களின் அத்தி யாவசியத் தேவைகள் பூர்த்தி செய் யப்பட வேண்டும். அனைத்து பிணைக் கைதிகளும் நிபந்தனைகளின்றி விடு விக்கப்பட வேண்டும்.” இவ் வாறு கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *