பக்தர்கள் பாதயாத்திரை: லாரி விபத்தில்
ஒருவர் பரிதாப சாவு – இருவர் படுகாயம்!
சிவகாசி,ஜன.6- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்திப் பயணம் சென்ற பக்தர்கள் கூட் டத்தில் லாரி புகுந்தததால் ஏற் பட்ட விபத்தில் பக்தர் ஒருவர் பலியானார். இருவர் படுகாய மடைந்தனர்.
சிவகாசி வடக்கு ஆணைக்குட் டத்தைச் சேர்ந்தவர்கள் பூப் பாண்டி (வயது 40) ரமணா (வயது 22) கருப் பசாமி (வயது 23) 3.1.2024 அன்று திருச்செந்தூருக்கு பக்திப் பயணமாக கிளம்பி வந்தனர்.
சாத்தூர் – கோவில்பட்டி 4 வழிச் சாலையில் தனியார் மில் அருகில் அதிகாலை 3 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப் போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி யது. நிகழ்வு இடத்தில் பூப்பாண்டி பலியானார். ரமணா, கருப்பசாமி படுகாயம் அடைந்து, கோவில்பட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.