சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது. இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி யுள்ளது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் சூரியன் உயிரோடு இருக்கும்…?
நாசா கணித்ததை விட சூரியன் இயங்கும் வேகம் அதிகரிப்பு – சூரிய சுழற்சியால் பூமிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்து, அதனால் சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு, அது மேற்பரப்பில் சுழன்று வருவதால் விஞ்ஞானிகள் கலக்க மடைந்துள்ளனர்.
சூரியன் எப்போதுமே தன்னகத்தே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய கோளாகவே இதுவரை இருக்கிறது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான விஷயங் களையும் அறிவியல் அறிஞர்கள் நமக்குப் பகிர்வது உண்டு.
சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரியனைப் பற்றி ஆய்வு மேற் கொள்ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று, அய்ரோப்பாவும் சூரியனை பற்றி அறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக நாசா அமைப்பு, பார்க்கர் சோலார் புரோப் என்ற பெயரிலும், அய்ரோப்பிய அமைப்பு சோலார் ஆர்பிட்டர் என்ற பெயரிலும் திட்டங் களை செயல்படுத்தி, விண்வெளி வானிலை உள்ளிட்ட விசயங்களை பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவும், சூரியனைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு, அதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்த திட்ட செயல்பாடு நடைமுறைப்படுத்த முடிவாகி இருந்தது. இதன் நோக்கம், சூரியனின் மேற்பரப்பு, சூரியப் புயல், சூரிய வெடிப்பு, பிளாஸ்மா வெளி யேற்றம் உள்ளிட்டவை தொடர்ந்து பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
தற்போது சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும் புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது, இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி யுள்ளது.
இன்னொரு புறம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி
வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந் துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் போலார் வோர்டக்ஸ் பற்றிதான் எல்லாப் பேச்சும் நடைபெறுகிறது. சூரியனின் வடக்குப் பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டது. அது இப்போது போலார் வார்டக்ஸாக சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. இதன் தாக்கத்தை பற்றிதான் ஆராய்ந்து வருகிறோம் என்று எழுதியுள்ளார்.
சூரியனில் அவ்வப்போது சூறாவளிகள் ஏற்படும். இந்த சூரியப் புயலால் தகவல் தொழில் நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும். ஆனால், இப்போது சூரியனின் வடக்குப் பகுதியில் அதிலிருந்து ஒரு துண்டே உடைந்து, அதனால் பெரிய அளவில் சூறாவளி எழுந்து, அது சூரியனின் வட துருவத்தின் மேலே நெருப்பாய் சுழன்று கொண்டிருக்க, அது பூமிக்கு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.