சென்னை, ஜன.4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (3.1.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியுள்ளார். ஆனால், தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடி யாது என்று நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார். ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்த கடந்த 9 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ்நாட் டின் உரிமைகள் பறிக்கப்படுவ தும், அதை எதிர்த்து தமிழ் நாடு முதலமைச்சர் குரல் கொடுப்பதும் தொடர்கதை யாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ, ‘உலகில் எந்த இடத்துக்கு சென்றாலும் தமிழ்நாடு, தமிழ்மொழி பற்றி புகழ்ந்து பேசாமல் என்னால் இருக்க முடிவதில்லை’ என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசி யுள்ளார்.
கடந்த 2017 முதல் 2022 வரை டில்லியில் உள்ள சம்ஸ் கிருத பல்கலைக் கழகத்துக்கு ரூ.1,074 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மைசூருவில் உள்ள ஒன்றிய அரசின் இந்திய மொழிகளுக் கான நிறுவனத்துக்கு ஒதுக் கப்பட்ட தொகை ரூ.53.61 கோடி மட்டுமே. தமிழ், கன் னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்காக இத் தொகை வழங் கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை பொய்யாக புகழ்ந்து கூறுவதை தமிழ் நாட்டு மக்கள் நம்பமாட் டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் குறித்து மோடியின் பொய்யான புகழுரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை
Leave a Comment