ராமன் கோயில் பெயரில் நன்கொடை மோசடி விசுவ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் புலம்புகிறார்

1 Min Read

புதுடில்லி, ஜன.3- விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய் தித் தொடர்பாளர் வினோத் பன்சால் 31.12.2023 அன்று கூறிய தாவது:
அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு ஜனவரி 22-இல் நடை பெறவுள்ளது. இந்த நிலையில், ராமன் கோயிலின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் நிதி மோசடி நடைபெறுவது தெரிய வந்துள்ளது. மோசடி நபர்கள் கோவிலின் பெயரில் நன் கொடை கோரி சமூக வலைதளங் களில் போலி செய்திகளை வெளியிடுகின்றனர். இந்த செய்திகளில் கியூஆர் கோடும் இடம் பெற்றுள்ளது.

அதனை பக்தர்கள் தங்களது அலைபேசியில் ஸ்கேன் செய்து ராமன் கோயிலுக்கு நன் கொடை செலுத்துமாறு கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பொதுமக்கள் ஸ்கேன் செய்து அனுப்பும்பணம் மோசடியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச் சகம், டில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல் துறை தலைவர்களி டம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமன் கோயியிலுக்காக நன் கொடை வசூலிக்க சிறீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா இதுவரை யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. எனவே, கியூஆர் கோடு போன்ற டிஜிட்டல் நிதி மோசடி களில் பக்தர்கள் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு வினோத் பன்சால் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *