அரசியலுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் ராமன் கோயில் விழா குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜன.1 அரசியல் நோக் கங்களுக்காக மக்களின் மத உணர் வுகளைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்று ராமன் கோயில் விழா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019ஆ-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமன் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமன் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடை யவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவராக குழந்தை ராமனின் சிலை வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அரசியல் கட்சியின் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக் கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டி ருக்கிறது.

இருப்பினும், மத நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. இந்திய ஜனநாயக அரசு மதம் சார்ந்ததாக இருக்கக் கூடாது என்றும் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தங்கள் தரப்பிலிருந்து யாரும் கலந்துகொள்ள மாட் டார்கள் எனத் தெரிவித்து விட்டது. இந்த சூழலில் ராமன் கோயில் திறப்பு விழா பற்றி செய் தியாளர்களிடம் பேசிய சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “மதச்சார்பின்மை என் பது அரசு மற்றும் அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது என அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக் கிறது. ஆனால், ராமன் கோயில் திறப்பு விழா அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணாக, மதத் தின் வெளிப்படையான அரசி யலை பிரதிபலிக்கிறது. இந்த விழாவை உத்தரப்பிரதேச முதல மைச்சர் அரசமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் முன்னிலையில் இந்தியப் பிரதமர் தொடங்கி வைக்கப் போகிறார். இது அவர்களின் (பா.ஜ.க) அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் மத உணர்வுகளைத் தவறாகப் பயன் படுத்துவதாக நாங்கள் உணர்கி றோம். அரசியல் சாசனத்துடனோ அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு களுக்கோ பொருந்தாத மதத்தின் வெளிப்படையான அரசியல் மயமாக்கல் இது. இந்த அரசியல் மயமாக்கலை எதிர்ப்பதற்கான வழி, மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதே” என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *