நாக்பூர்,டிச.29- ”இண்டியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்,” என, காங்கிரஸ் மக்களவை உறுப் பினர் ராகுல் மீண்டும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின், 139ஆவது நிறுவன நாள், நாடு முழுவதும் அக்கட்சி தொண் டர்கள் சார்பில் நேற்று (28.12.2023) கொண்டாடப்பட் டது. இதையொட்டி, மகா ராட்டிரா மாநிலம் நாக்பூரில், ‘நாங்கள் தயார்’ என்ற தலைப் பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கட் சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட் டத்தில் ராகுல் காந்தி பேசிய தாவது:
நாட்டில் உள்ள பல துறைகளில், இதர பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் பழங்குடியினருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஆகையால், ‘இண்டியா’ கூட் டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்.
வேலையில்லா திண்டாட் டம் இப்போது உச்சத்தில் உள்ளது. இண்டியா கூட்டணி யால் மட்டுமே, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். காங்கிரசில், ஒரு சாதாரண தொழிலாளி கூட தலைமையை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியும். பா.ஜ.,வில் உத்தரவுகள் அனைத் தும் தலைமையிடத்தில் இருந்து தான் பிறப்பிக்கப்படுகின்றன. நாட்டின் கடிவாளம் சாமானி யர்களின் கையில் இருக்க வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கம்; பா.ஜ., இதற்கு எதி ராக உள்ளது.
பசுமை புரட்சி, வெண்மை புரட்சி மற்றும் தகவல் தொழில் நுட்ப புரட்சி போன்றவை, விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களால் துவங்கப் பட்டவை.
இந்த புரட்சிகளுக்கு எல்லாம் வித்திட்டது காங்கிரஸ் கட்சியே. இன்றைய சூழலில், அனைத்து ஜனநாயக நிறுவ னங்களையும், பா.ஜ., கைப்பற்றி யுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
கட்சியின் தலைவர் பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறிய தாவது:
நாட்டில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; பணவீக்கம் உயர்ந்துள்ளது. வேலையின்மையும் அதிகமாக உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு இடமளிக்கப்பட வேண் டும் என்பதால், 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பிரதமர் மோடி சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ., ஆட்சியில் பணக்கா ரர்கள், பணக்காரர்களாக உள்ளனர். ஏழைகள், ஏழை யாகவே உள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.