அயோத்தி. டிச.29- பன்னாட்டு தரத்தில் விமான நிலையம், ரயில் நிலையம் என அயோத்தி நகரில் ரூ.லட்சம் கோடி வரை வளர்ச்சிப் பணிகள் செய் யப்பட்டுள்ளன. அங்கு ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.
அயோத்தி நகரம்
உத்தரப்பிரதேச மாநிலம் பைசா பாத் மாவட்டம், தற்போது அயோத்தி மாவட்டமாக மாற்றப் பட்டு உள்ளது. இந்த மாவட் டத்தில் உள்ள அயோத்தி நகரம். 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.மாநகராட்சித் தகுதி பெற்று உள்ள இந்த நகரத்தில், 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொத்தம் 55 ஆயிரத்து 890 பேர் வசிக்கின்றனர்.
ராம ஜென்ம பூமி, நகரத்தின் மய்யப் பகுதியில் உள்ளது. இங்கு ராமன் கோவில் கட்டுமானம் தொடங்குதற்கு முன்பு வரை அயோத்தி நகரம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. குறுகிய சாலைகள், செங்கல் வீடுகள்தான் அயோத்தி நகரத்தின் அடையாளமாக இருந்தது.
ஆனால் தற்போது நிலைமையே மாறிவிட்டது. ராமன் கோவில் கட்டுமானம் தொடங்கிய நாளில் இருந்து அயோத்தி நகரம் வளர்ச்சி பெற தொடங்கியது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ரூ.1,000 கோடியில் பணிகள்
உலகெங்கும் இருந்து நன் கொடைகள் பெறப்பட்டு ராமன் கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. மொத்தம் ரூ.1,000 கோடியில் பணிகள் நிறைவு பெறும் என்று கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வரும் சிறீராம ஜென்ம பூமிதீர்த்த கேஷ்த்ரா அறக்கட்ட ளையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மட்டும் ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுமார் 70 சதவீத கட்டடப் பணி நிறைவு பெற்றுள்ளது. 3 தளங்களில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் பணிகள் முடிந்து விட்டன. அதில் தரைத்தளத்தில் உள்ள கருவறை யில் குழந்தை வடிவிலான ராமன் சிலை. வருகிற 22- ஆம் தேதி பிர திர்ஷ்டை செய்யப்பட உள்ளது.
மீதமுள்ள 2-ஆம் தளம். கோவில் வளாகத்தில் அமைக்கப் பட உள்ள இதர கோவில்கள் மற்றும் 161அடி உயரம் கொண்ட கோபுரம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கோடியில் வளர்ச்சிப்பணி
ராமன் பிறந்த இடத்தில், இந்த கோவில் கட்டப்பட்டு வருவதால், மாதத்திற்கு சுமார் 45 லட்சம் பக்தர்கள் அயோத்தி நகரத்திற்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. எனவே அதற்கேற்றப்படி அயோத்தி நகரத்தை கட்டமைக்க ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் தற்போது மட்டும் ரூ.66 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இன்னும் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நகரில் அத்தியாவசியப் பணிக ளான குடிநீர், பாதாளச் சாக்கடை, தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள் ளன. கோவில் சுற்றியுள்ள பகுதி களில் மட்டும் சுமார் ரூ.1,000கோடி அளவுக்கு அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள்
அயோத்தி நகரை கட்டமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் அயோத்தி நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட்டு உள்ளன. இதுதவிர மாநில அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு அயோத் தியில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரில் உள்ள சரயு நதிக்கரை அழகுப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ராமன் படித்துறை சீரமைக்கப்பட்டு, இரவு நேரங் களில் மின்விளக்கு அலங்கார காட்சி நடத்தப்படுகிறது. சரயு நதி மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் சுமார் ரூ.350கோடி செலவில், மரியதா புருஷோத்தம் சிறீ ராம் பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அயோத்தி ரயில் நிலையம் ரூ.430 கோடியில் சீர மைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானநிலையங்களை விட நவீன வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையம், அயோத்தி ராமன் கோவில் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது இங்கிருந்து, 6 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 2 அம்ரீத் பாரத் ரயில்களும் இயக்கப்பட உள்ளன. பன்னாட்டு தரத்தில் கட்டப்பட் டுள்ள இந்த ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை பிரதமர் மோடி, நாளை மறு நாள் (30-ஆம் தேதி) தொடங்கி வைக் கிறார்.
அயோத்தியில் மதுரை பக்தரின் ஆதங்கம்
அயோத்திக்கு வந்திருந்த மதுரையை சேர்ந்த சிம்மக்கல் சுப்பிரமணி கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா வருவேன். இந்த முறை நான் அயோத்திக்கு வந்த போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். இது அயோத்தியா, இல்லை வேறு நகரமா என்று எண்ணத் தோன்றியது, எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. இங்குள்ள அனைத்து சாலைகளும் பெரிதாகி விட்டன. எனக்குள் இதனை பார்க்கும்போது எப் போது மதுரை இது போன்று மாறும்? என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, 5 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.1200 கோடியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப் பட்ட மதுரை எய்ம்ஸ் மருத் துவமனை பணிகள் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. ஜப்பான் நிறுவனம் கடன் தந்தால்தான் தொடங்க முடியும் என்கிறார்கள். ஆனால் அயோத்தி நகரத்திற்கு மட்டும் ஆயிரக் கணக்கான கோடியில் திட்டங் களை தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு மட்டும் செலவிட ஒன்றிய அரசிடம் நிதி இருக்கிறதா?. ஒரு கண்ணுக்கு வெண்ணெய். இன் னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா?. அயோத்திக்கு ஒரு பார்வை, மது ரைக்கு ஒரு பார்வையா? இரண்டும் ஆன்மிக நகரங்கள் தானே.
-இவ்வாறு அவர் கூறினார்.