இந்த உலகில் பல வகையான நிகழ்வுகள் நடக்கின்றன உலகு பல விநோதமான நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ளது. ஒருநாள் இரவு வரவில்லை என்றால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் இரவே வராமல் பகலாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இந்த பூமியில் இடம் உள்ளதா எனப் பலரும் யோசிப்பார்கள். அது உண்மையான ஒன்று. சில நாடுகள் உள்ளன. அங்கு ஆறு மாதம் பகலாகவும் அடுத்த ஆறு மாதம் முழு இரவாகவும் இருக்கும். இந்த பதிவில் அப்படி உள்ள சில நாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
பூமியின் மாற்றம்
பூமி ஆனது 23.4 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இந்த பூமியானது சாய்ந்து சுற்றுவ தால் கோடைகாலத்தில் முழு வதுமாக பகலாகவும் மற்றும் பனிக் காலத்தில் முழுவதுமாக இரவாகவும் இருக்கும். கோடைக் காலத்தில் சூரியன் உதயம் மற்றும் மறைவு என்பது இல்லை மற்றும் பனிக்காலத்தில் நிலவு உதயம் மற்றும் மறைவு என்பது கிடையாது.
சூரியன் காலையில் சாய்வாக ஒரு பக்கத்திலி ருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும். இதுபோல் ஆறு மாதம் பகல் மற்றும் இரவு என மாறும். இது பூமியின் வட மற்றும் தென் துருவத்தில் உள்ள நாடுகளில் நடக்கும். எந்த நாடுகளில் நடக்கிறது எனப் பார்க்கலாம்.
இந்தியா
இங்குக் கோடைகாலம் முழுவதும் சூரியன் உதயம் எப்பொழுதும் போல் இல்லாமல் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே சூரிய உதயம் இருக்கும் அதே போல் மறைவு வெகுநேரம் கழித்து மறையும். பனிக்காலத்தில் இரவு நேரம் என்பது அதிகமாக இருக்கும்.
அந்த காலநிலையால் சிலரது உடல் நிலையின் தன்மை மாறுபடும். அதனை சிலரால் தாங்குவது என்பது மிகவும் கடினம். ஆறு மாதம் பகலாகவும் அடுத்த ஆறு மாதம் இரவாகவும் இருக்கும் என்றால் அங்கு இருக்கும் மக்கள் வாழ்வில் ஏற்படும் பல வகையான சூழ்நிலைகள் மற்றும் கால நிலை மாற்றம் நேரம் கணிப்பு எனப் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
பின்லாந்து
இந்த நாடு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பார்வை யிடும் இடம் ஆக மாறி உள்ளது. இந்த நாட்டில் சூரிய வெளிச்சம் என்பது 73 நாட்கள் மட்டும் தான் இருக்கும். மற்ற நாட்களில் அனைத்தும் பனியாகத்தான் இருக்கும்.
இங்கு இருக்கும் மக்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் மாறிவிட்டனர். சூரிய வெளிச்சம் பார்ப்பதற்கு அழகான காட்சியாக அமையும். அதனால் இங்குப் பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்கு இருக்கிற பல வீடுகள் மாடி என எதுவும் இல்லாமல் கூரை போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன.
பனிக்காலத்தில் அதிகமாகப் பனிபொழிவினால் அதைச் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அதனால் இங்குப் பலரும் கூரை போன்ற அமைப்பில் மட்டும் வீடு கட்டுகிறார்கள். இந்த நாடு தீவுகள் மற்றும் அதிகளவில் ஏரிகளால் நிறைந்துள்ளது. இங்கு வேலை செய்யும் நேரத்தைக் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப காலை மற்றும் இரவு நேரங்களைக் கணக்கிடுவது வழக்கம்.
கனடா
இந்த நாடு பலரும் தெரிந்த நாடுகளில் ஒன்று. இந்த நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் பனிப்பொழிவு என்பது அதிகமாகவும் மற்றும் பல இடங்களில் பனி முழுவதுமாக மூடி காணப்படும். உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு தான் இந்த கனடா. இங்குப் பனிப்பொழிவு பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் அதில் பல பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் விளை யாடுவது என்பது அதிகமாக உள்ளது.
இந்த நாட்டில் 50 நாட்கள் சூரியன் உதயம் மறைவு என எதுவும் இல்லாமல் முழுவதுமாக பகல் ஆகத் தான் இருக்கும். அப்பொழுதும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் ஏனென்றால் அந்த கோடைக்காலத்தில் மக்கள் அரோரா வியூவிங், மலையேற்றம், ஹாட்ஸ்பிங்ஸ்,தொங்கு பாலம், இது போன்று பல உள்ளதால் வெயில்காலத்தில் இங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
நார்வே
இந்த நாட்டிற்கு மற்றொரு பெயர் ‘நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு’ எனக் கூறுவார்கள். இந்த நாட்டில் ஒரு ஆண்டுக்கு 76 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும். காலை மற்றும் இரவும் சூரிய வெளிச்சம் தான் இருக்கும். ஒரு நாள் முழுவதும் சுமார் 20 மணி நேரம் சூரியனின் தாக்கம் நேரடியாக இருக்கும். இந்த நாட்டில் மே மாதம் துவங்கி ஜூலை மாதம் இறுதி வரை வெயில் காலம் ஆக இருக்கும். இந்த நாடு உலகின் ஆர்டிக் சைக்கிள் பகுதியில் உள்ளது.
சுவீடன்
இந்த நாட்டில் அதிகமாக பனிப்பொழிவு என்பது இல் லாமல் சாதாரணமான நிலையை விடச் சிறிதளவு அதிக மாகத் தான் இருக்கும். இந்த நாடு மற்ற நாடுகளை விட கடும் குளிராக இல்லாமல் மிகவும் இதமாக இருக்கும்.
இந்த நாட்டில் நாள்தோறும் சூரியன் 4.30 மணியளவில் உதயம் ஆகி நள்ளிரவில் தான் சூரியன் மறையும். இது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும். அந்த காலநிலையில் மக்கள் கோல்ஃப் விளையாடுவது மற்றும் மீன் பிடிப்பது,தேசிய பூங்காக்களுக்கு செல்வது எனப் பல விடயங்களைச் செய்வார்கள்.
அய்ஸ்லாந்து
இந்த அய்ஸ்லாந்து அய்ரோப்பா கண்டத்தில் பிரிட்டனுக்கு அடுத்த படியாக உள்ள மிகப் பெரிய தீவாகும். இந்த நாட்டில் கோடைகாலங்களில் சூரியன் மறைவைப் பார்க்க முடியாது. மே மாத பாதியிலிருந்து ஜூலை மாதம் முடிவு வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த நாடு பனிக்காலத்தில் மிகவும் அழ கான நாடாக இருக்கும். இந்த நாட்டில் வெயில்காலத்தில் சைக்கிளிங் மற்றும் குகைவாசம், வன விலங்கு மற்றும் தேசிய பூங்காவை பார்வையிடுவதற்குச் செல்வது என அந்த நாட்டு மக்கள் செய்வார்கள்.
அலாஸ்கா
கனடாவிற்கு மேலே இருக்கும் இந்த அலாஸ்கா நாடு அமெரிக்காவின் மாகாணம் ஆகும். இந்த நாட்டில் சூரியன் மறைவு என்பது இல்லை. பனிப்பொழிவு என்பது மிகவும் அதிகமாக இருப்பதால் இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இந்த நாட்டில் காலை 2மணிக்கு வரும் சூரிய ஒளியில் இந்த பனிமலைகள் அனைத்தும் மிளிரும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதைச் சுற்றுலாப் பயணிகள் அதிகள வில் வந்து ஒளிப்படங்கள் எடுப்பது மற்றும் பனிச் சறுக்கு விளையாடுவது எனப் பல விளையாட்டுகளை சந்தோசமாக விளையாடுவார்கள். இந்த நாட்டில் மே மாத இறுதியில் ஆரம்பித்து ஜூலை முழுவதுமாக சூரியன் மறைவைப் பார்க்க முடியாது.