தேவகோட்டை, டிச. 26- தேவகோட்டையில் 101 மாணவர்களுடன் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்.
25.12.2023 அன்று காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தேவ கோட்டை மாவீரன் ரூசோ அரங்கில் 101 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது
காரைக்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் கொ.மணி வண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்கத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்தார். கழக தகவல் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் அறி முகவுரையாற்றினார். காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாநில ப.க. அமைப்பாளர் ஒ.முத்துக்குமார், கழக பேச்சாளர் தி.என்னா ரெசு பிராட்லா, ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், நகர தலைவர் வீ.முருகையன், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி வாழ்த்துரை வழங்கினார்.
கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் – “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப் பிலும், தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா.கவுதமன் “பேயாடுதல், சாமியாடுதல்” அறிவியல் விளக்கம் என்ற தலைப்பிலும், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் “பார்ப்பன பண்பாட்டுப் படை யெடுப்புகள்” என்ற தலைப்பிலும், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில் வம் “வாழ்வியலே பெரியாரியல்” என்ற தலைப்பிலும். மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன் பழகன் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பிலும், பேராசிரியர் மதுரை சுப.பெரியார் பித்தன் “மந்திரமா? தந்திரமா?” அறிவியல் விளக்கம் என்ற தலைப்பிலும், பேராசிரியர் மு.சு.கண்மணி “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்” என்ற தலைப்பிலும் வகுப்பெடுத்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார், பயிற்சியில் பங்கேற்ற மாண வர்களையும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய கழக பொறுப்பாளர்ளையும் பாராட்டி உரையாற்றினார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பதில் அளித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் இயக்க புத்தகங்களைக் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கி சிறப்பித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஜெயா திராவிட மணி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிகுமார், முனைவர் வே.இராஜவேல், ஜெகதை ச.குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு.ராஜாராம், சிவகங்கை மாவட்ட ப.க. செயலாளர் ராஜாங்கம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, திருப்புவனம் ஒன்றிய தலைவர் குமார், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, காரைக்குடி நகர செயலாளர் தி.கலைமணி, தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன், கியூபா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் புனிதா உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிறப்பாக குறிப்பு எடுத்த அ.சுவாதி, த.கமலேஸ்வரன், ரா.மகாபரணி, ச.பாண்டித்துரை, ரா.ஜெயப்பிரகாஷ் ஆகிய 5 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று சிறப்பித்த மாணவர்கள் வகுப்புகளின் சிறப்பு குறித்து கருத்து கூறினர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் கழகப் பொறுப்பாளர்களுடன் குழு நிழல் படம் எடுத்து மகிழ்ந்தனர்
தேவகோட்டை பயிற்சிப் பட்டறையில் ரூ 12,105 க்கு புத்தகங்கள் விற்பனையாயின.
பயிற்சிப் பட்டறையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த இருபால்மாணவர்கள் 101 பேர் பங்கேற்று சிறப்பித் தனர்.