பெங்களூரு, டிச.22- 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தலைவர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப் பினர், சாமியார்கள் என அனைவரும் மத வன் முறையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், ராமர்கோவில் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சாமியார் ஒருவர் பேசி சர்ச்சை யைக் கிளப்பியுள்ளார்.
கருநாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் தலைவராக இருக்கும் சிறீவிஸ்வ பிரசன்ன தீர்த்தர், “நாங்கள் இந்துக்கள் என்ற முறையில் எங்கள் தேசத்தை இந்துராஷ்டிரம் என்கிறோம். இதை எதிர்க்க யாருக்கும் அதிகாரம் இல்லை. நம் கருநாடகா ஒரு கன் னட மாநிலமா இல்லையா? அப்படியென்றால் இங்கே கன்னடர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? மற்ற மொழிகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று யாராவது சொன்னார்களா? பிற மொழிகள் இருப்ப தால், இது கன்னட மாநிலம் இல்லையா? சிறுபான்மையினர் என்ற பெயரில் இந்துக்களின் புனித மய்யத்தை அவமதிக்கும் பணியைச் செய்யக் கூடாது. அரசமைப் புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்பவர்கள் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கக் கூடாது. கோவில் கட்ட அரசு பணம் தரவில்லை, நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டது. எனவே, அரசின் கருவூலத்தில் சிறுபான்மையினருக்கு பங்கு உண்டு என்று கூறுபவர்களின் வாதத்திற்கு இங்கு மதிப்பில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோவில் கட்டியுள்ளோம்” எனக் கூறியுள்ளார். மடாதிபதி விஸ்வபிரசன்னாவின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
முதியவர் இதயம் 11 வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை!
திருப்பதி, டிச.22- தெலங்கானா மாநிலம் வனஸ்தலி புரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக் கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந் தைகள் இதய மய்யத்தில் இதயம் கொடை கேட்டு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறீகா குளத்தைச் சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளைக் கொடையளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் சிறீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப் பட்டது.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத் திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மய்ய மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய் யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத் தார். இது இந்த மருத்துவமனையில் 10 ஆவது வெற்றி கரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.