சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பட்டறைகள்

1 Min Read

சென்னை, டிச.21- இந்தியாவின் பிஎல்டிசி முன்னோடியான சூப்பர் ஃபேன், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள 3000 ப்ளூ காலர் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகை யில் தொடர்ச்சியான திறன் மேம் பாட்டுப் பட்டறைகளை அறி முகப்படுத்துவதற்கான முழுமை யான தொழில்துறை முதல் முயற் சியை எடுத்துள்ளது. பிஎல்டிசி விசிறிகளுக்கான விரிவடைந்து வரும் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய, தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர் களுக்கு அதிகாரம் அளிக்கவும் இந்த பட்டறைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாக் டர் மயூர் சுந்தரராஜன் கூறுகையில், “இந்நிறுவனம் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து, ஆற்றல் திறன் கொண்ட சாதனங்கள் துறையில் நீடித்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதே எங்கள் அர்ப் பணிப்பாகும். இந்த விசிறிகளின் வாழ்வா தாரம் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த சந்தையுடன் இணைந்த சூப்பர் ஆற்றல் திறன் கொண்ட விசிறி களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் தொலைநோக்கு பார் வையுடன் இது தொடங்கியது.
இது வழக்கமான விசிறிக்கும் பிஎல்டிசி மோட்டார் அடிப்படையிலான மின்விசிறிக்கும் சர்வீசிங், பராமரித்தல் மற்றும் கண்டறிதல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றிய கற்றல் அனுபவத்தை பெற உதவும். இந்த தொழில் சார்ந்த திட்டத்திற்காக எலக்ட்ரீசியன் அசோசியேஷன்கள் மற்றும் ஒருங் கிணைப்பாளர்களுடன் இணைந்து தென்னிந்தியா முழுவதிலும் உள்ள ப்ளூ காலர் நிபுணர்களை சேகரிக்க சூப்பர்ஃபேன் திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *